டைப் 2 சர்க்கரை நோய்க்கு மாத்திரைங்கள் மிகவும் முக்கியம். இந்நிலையில் சுகர் அளவை குறைக்க வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் சுகர் நோய்யை கட்டுப்படுத்த முடியும்.
இஞ்சியை நாம் எடுத்துகொள்ளும்போது, ஏ1சி அளவு மற்றும் சிரம் குளுக்கோஸ் அளவு குறையும். இஞ்சியில் உள்ள சத்துக்கள் சுகர் நோய்யை கட்டுப்படுத்த உதவுகிறது. கார்போஹைட்ரேட் மெட்டபாலிசம் மற்றும் ரத்த பையோ கெமிக்கல் மற்றும் லிப்பிட் அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இந்நிலையில் இது ரத்த குளுக்கோஸ் அளவை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.
இஞ்சியில், ஜிஞ்சரால் உள்ளது. நமது தசை செல்கள் குளுக்கோஸை எடுத்துகொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த உதவுகிறது. இவை அதிக ரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது.
இந்நிலையில் இஞ்சி ஜீரணத்தை சீராக்குகிறது. சளி மற்றும் இருமல் உள்ளிட்டவற்றை குணப்படுத்த உதவுகிறது. வீக்கத்திற்கு எதிரான பண்புகள், ஆண்டி பயாடிக் ஆக மாறுகிறது.
எப்படி செய்வது?
2 கிராம் இஞ்சி பொடி, வெந்நீர், உப்பு. வெந்நீரில், இஞ்சி பொடி, உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“