/indian-express-tamil/media/media_files/2025/06/06/WbPDJaWnHRDvRv5sN1qB.jpg)
Glass skin Beauty Tips
உங்க சருமம் கண்ணாடி போல பளபளன்னு மின்ன ஆசையா இருக்கீங்களா? பிரபலங்களின் "கிளாஸ் ஸ்கின்" ரகசியம் என்னன்னு தெரிஞ்சுக்க நீங்க ஆர்வமா இருக்கீங்கன்னு புரியுது. அவங்க என்ன பண்றாங்கன்னு இப்ப நம்ம பாக்கலாம் வாங்க!
ரோஸ் வாட்டர் மேஜிக்: புத்துணர்ச்சி தரும் முதல் படி!
கண்ணாடி சருமத்துக்கான முதல் ரகசியம் என்ன தெரியுமா? ரோஸ் வாட்டர்! சுத்தமான பன்னீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வச்சுக்கோங்க. தினமும் காலையிலும், இரவு படுக்கப்போகும் முன்னரும் இதை உங்க முகத்துல ஸ்ப்ரே செய்யுங்க.
இந்த ரோஸ் வாட்டர் மிஸ்ட் உங்க சருமத்துல இருக்குற நுண்துளைகளை இறுக்கி, இறந்த செல்களை நீக்கி, பழைய மேக்கப் எச்சங்களையும் சுத்தமாக்கும். இதன் மூலம் உங்க சருமம் இளமையாகவும், இறுக்கமாகவும், அழகாகவும் ஜொலிக்கும்.
பியூர் ரோஸ் வாட்டரை எப்படி கண்டுபிடிக்கிறது? சுத்தமான ரோஸ் வாட்டர் நிறமற்றதா இருக்கும். வெறும் நறுமணம் மட்டுமே இருக்கும். அதனால, கலர் கலந்த ரோஸ் வாட்டரை வாங்காம தவிர்ப்பது நல்லது.
இந்த ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே எல்லா வகை சருமத்தினருக்கும் பொருந்தும். இளம் வயதினர் மட்டுமல்ல, வயதானவர்களுக்கும் இது ரொம்ப நல்லது. சோர்வாகவும், மந்தமாகவும் உணரும்போது, முகத்தில் ஒரு முறை ஸ்ப்ரே செய்தால் போதும், உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். கோடை காலங்களில் இதை ஃபிரிட்ஜில் வைத்து சில்லென்று ஸ்ப்ரே செய்யலாம். குளிர் காலத்தில் இதைத் தவிர்க்கலாம்.
அரிசி நீர் அற்புதம்
கண்ணாடி சருமத்துக்கான இரண்டாவது படி அரிசி நீர். தினமும் அரிசி சமைக்கும்போது, அதை நன்கு கழுவிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடுங்கள். இந்த தண்ணீரில் ஒரு சிறிய காட்டன் பேடை முக்கி, முகத்தில் மெதுவாகத் தட்டி விடுங்கள்.
அரிசி நீரில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், சருமத்திற்கு மிகவும் நல்லது. இது சருமத்தின் நிறத்தை சீராக்கி, கருமையைப் போக்க உதவும். "சும்மா அரிசி கழுவுற தண்ணில இவ்வளவு நன்மையா?" என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆம்! இதை வீணாக்காமல் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பயன்படுத்தலாம்.
சந்தேகங்கள் எழலாம் - முதலில் அரிசியை நன்கு இரண்டு மூன்று முறை கழுவி, சுத்தமான அரிசியில்தான் தண்ணீர் சேர்த்து ஊறவைக்க வேண்டும். அரை மணி நேரம் ஊறினாலே போதும். நொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
கற்றாழை & ரோஸ் இதழ்
மூன்றாவது படி கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் இதழ் பவுடர். சுத்தமான, நிறமற்ற கற்றாழை ஜெல்லை (இரண்டு டீஸ்பூன்) எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கால் டீஸ்பூன் காய்ந்த ரோஜா இதழ்களைப் பொடி செய்த ரோஸ் பெட்டல் பவுடரை சேர்க்கவும். இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இந்த இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவுங்கள். இது உங்க சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்தையும், குளிர்ச்சியையும் அளித்து, இறுக்கமாக்கி, கண்ணாடி சருமத்தை அடைய உதவும்.
இதை தினமும் செய்ய வேண்டியதில்லை. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் போதும். கண்களுக்கு கீழும் தடவலாம், இது சோர்வை நீக்கி, கண்களுக்கு புத்துணர்ச்சி தரும். கழுத்துப் பகுதியிலும் தடவுவது நல்லது. தடவிய பிறகு 10 நிமிடங்கள் காய விடவும்.
இந்த மூன்று எளிய வழிமுறைகளையும் நீங்களும் முயற்சி செய்து பாருங்க. இந்த முறைகள் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன், பளபளப்பாக, ஆரோக்கியமாக மாற்றும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.