ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் தனது நீண்ட நாள் காதலியான, இந்திய வம்சாவளியை சேர்ந்த வினி ராமனை மார்ச் 18 அன்று ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது.
இருப்பினும், வினி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால்’ இந்திய பராம்பரியங்களின் படியும், திருமணம் செய்துகொள்ள மேக்ஸ்வெல் மற்றும் வினி முடிவு செய்தனர்.
From Maxwell’s wedding 💙❤️
— RO45 ☀️ (@Pikachu__264) March 28, 2022
Congratulations to this beautiful couple 💃💗 pic.twitter.com/z6vIEuiwja
அதன்படி மார்ச் 27 அன்று, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமனும் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொள்கின்றனர். மேக்ஸ்வெல் ஷெர்வானியில் இருந்தபோது, வினி இந்திய பாரம்பரிய படி, புடவை ஒன்றை அணிந்திருந்தார்.
மேக்ஸ் மற்றும் வினி, இன்ஸ்டாகிராமில் தங்கள் நலங்கு விழாவின் அழகான படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக தமிழில் அச்சிடப்பட்ட மேக்ஸ்வெல், வினி திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலானது. கொரோனா தொற்றுநோய்க்கு முன்பாக இந்த ஜோடி 2020 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காக விளையாடி வரும் மேக்ஸ்வெல் ரூ. 11 கோடியுடன் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் இன்னும் சில நாட்களில் அணியில் சேருவார் என ஆர்சிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“