/indian-express-tamil/media/media_files/2025/04/12/8NGjMpS3q2av98lycNLG.jpg)
DIY Night cream
ஆரோக்கியமான, உள்ளிருந்து ஒளிரும் சருமத்தைப் பெறுவது என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. பளபளப்பான சருமம் என்பது வெறும் அழகியல் மட்டுமல்ல, அது ஆரோக்கியத்தின் அடையாளமாகும்.
வேகமான மற்றும் பரபரப்பான வாழ்க்கையில், உங்கள் சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். எனவே, சிறிய இடைவேளைகள், வார இறுதி நாட்களில் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்துவது அவசியம்.
சரி, வீட்டில் இயற்கையாகவே உங்கள் சருமத்தை எப்படி பளபளக்க வைப்பது?
பளபளப்பான சருமத்திற்கான வீட்டில் தயாரிக்கப்பட்ட நைட் க்ரீம்
தேவையான பொருட்கள்:
2 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்
1 டேபிள்ஸ்பூன் தேன்
1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
5-6 துளிகள் ஏதேனும் ஒரு அத்தியாவசிய எண்ணெய் (விரும்பினால்)
பயன்படுத்தும் முறை:
அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். இதை முகத்தில் தடவவும். சருமத்தில் முழுமையாக உறிஞ்சப்படும் வரை மெதுவாக மசாஜ் செய்யவும்.
நன்மைகள்:
இந்த DIY நைட் க்ரீம் நீங்கள் தூங்கும்போது உங்கள் சருமத்திற்கு நீரேற்றம் மற்றும் ஊட்டமளித்து, காலையில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. கற்றாழை மற்றும் ஆலிவ் எண்ணெய் சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும் அமைதியான மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.
அதேசமயம் தேன் சருமத்தைப் பிரகாசமாக்கி அனைத்து களங்கங்களையும் நீக்குகிறது.
இத்துடன் நீரேற்றத்துடன் இருப்பது, சீரான எக்ஸ்ஃபோலியேஷன், சன்ஸ்கீரின், சமச்சீர் உணவு அனைத்தும் சருமப் பொலிவை மேம்படுத்தும். தியானம் அல்லது யோகா மன அழுத்தத்தை குறைக்கவும், உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் ஒரு வழியாகும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இயற்கையாகவே சருமத்தைப் பளபளக்கச் செய்ய உதவும்.
இந்த தகவல் டாக்டர் ரேஷல் இணையதள பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.