உடல் கழிவுகள் வெளியேறும், சருமம் பளபளக்கும்… தினமும் காலையில் இதை குடிங்க; டாக்டர் நித்யா
உடல் உறுப்புகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அது முதலில் முகத்தில்தான் சரும பிரச்னையாக வெளிப்படும். சருமம் பொலிவாக வைத்துக்கொள்வது எப்படி?சரும பிரச்னைகளுக்கு தீர்வுகள் என்ன? உணவு முறைகள் என்ன? விளக்குகிறார் மருத்துவர் நித்யா.
உடல் உறுப்புகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அது முதலில் முகத்தில்தான் சரும பிரச்னையாக வெளிப்படும். சருமம் பொலிவாக வைத்துக்கொள்வது எப்படி?சரும பிரச்னைகளுக்கு தீர்வுகள் என்ன? உணவு முறைகள் என்ன? விளக்குகிறார் மருத்துவர் நித்யா.
சரும பிரச்னைகள் உள்ளவர்கள் விட்டமின் இ மற்றும் விட்டமின் ஏ அதிகளவில் இருக்கக்கூடிய உணவுகளை சாப்பிடலாம். தினமும் நாம் சாப்பிடக் கூடிய டீ மற்றும் காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தையும் அறவே நாம் தவிர்க்க வேண்டும். உடல் உறுப்புகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அது முதலில் முகத்தில்தான் சரும பிரச்னையாக வெளிப்படும் என்று கூறுகிறார் மருத்துவர் நித்யா.
Advertisment
உணவு பழக்க வழக்க முறைகளை நடைமுறைபடுத்த வேண்டும். தோளில் நோய்கள் ஏற்படாமல் கவனமாக இருக்கவேண்டும். தூசி மற்றும் வளர்ப்பு விலங்குகளால் ஏற்படும் சரும பிரச்னைகள் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் நித்யா. கோடை காலங்களில் அதிகமாக வியர்க்கும்போது, வியர்வை படியும் இடங்களில் கருப்புபூஞ்சை தொற்று(அ) கரும்புள்ளி போல தோன்றக்கூடும் என்றும் அதனை கைகளால் சொறியக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார் மருத்துவர் நித்யா.
சரும பிரச்னைகளுக்கு என்ன தீர்வு:
1.மஞ்சள் குடிநீர்:
Advertisment
Advertisements
நமது தோலை பாதுகாக்கக்கூடிய முக்கியமான மூலிகை மஞ்சள். உடலில் சரும பிரச்னை உள்ளவர்கள், தண்ணீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து மஞ்சள் குடிநீராக ஒரு நாளைக்கு ஒருவேளை தினமும் 15 நாட்கள் குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்வதால், கல்லீரலில் இருக்கக் கூடிய மொத்த கழிவுகளும் வெளியேறும் என்கிறார் மருத்துவர் நித்யா.
2.மரமஞ்சள் குடிநீர்:
மஞ்சளை போல மரமஞ்சளும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. மரமஞ்சள் பொடியை கால் ஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் நீரில் கொதிக்க விட்டு, சுண்டக் காய்ச்சி பின் குடிக்க வேண்டும். இதனால், சரும பிரச்னைகள் தீரும் என்கிறார் மருத்துவர் நித்யா.
3.அருகன் குடிநீர்:
ஒரு கைப்பிடி அறுகம்புல், 5 மிளகு, ஒரு வெற்றிலை ஆகியவற்றை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, குடிநீராக காய்ச்சி வடிகட்டி அருந்த, நச்சுகளின் தாக்கத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தை சுத்திகரிக்கும். உடல் உஷ்ணத்தை குறைத்து, முகத்தைப் பொலிவாகும் என்கிறார் மருத்துவர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.