ஒரு நல்ல ஸ்ட்ரெச் உங்களை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்களை இலகுவாக உணர வைக்கிறது. நீங்கள் ஒரு பிஸியான நாளின் நடுவில் இருக்கும்போது கூட, உங்கள் சோர்வுற்ற கை, கால்களுக்கு சிறிது ஓய்வு கிடைக்கும் வகையில், ஒரு நல்ல ஸ்ட்ரெச் செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மசாஜ் தெரபிஸ்ட் ஜேம்ஸ் மூர் பரிந்துரைத்த க்ளூட் ஸ்ட்ரெச் (glute stretch) அத்தகைய ஒரு உடற்பயிற்சி. இது கீழ் முதுகு வலியைப் போக்க உதவுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், குளுட்ஸ் உங்கள் உடலில் உள்ள வலிமையான மற்றும் நீளமான தசைக் குழுவாகும், பொதுவாக இடுப்பு அல்லது பிட்டம் என குறிப்பிடப்படுகிறது.
குளுட்டஸ் பகுதியை உருவாக்கும் மூன்று தசைகள் உள்ளன: (gluteus maximus, gluteus medius, and the gluteus minimus). இந்த மூன்று தசைகளும் எப்பொழுதும் இணைந்து செயல்படுகின்றன. இது உங்கள் கால்களை தூக்குதல், சுழற்றுதல் மற்றும் நீட்டுதல் போன்ற அசைவுகளைச் செய்ய உதவுகிறது.
உங்கள் முதுகு வலிக்கும்போது, இந்த ஸ்ட்ரெட்ச் செய்யவும்! இது குளுட் தசைகளை (glute muscles) நீட்ட உதவுகிறது!
கீழ் முதுகுவலிக்கு குளுட்ஸ் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம், மேலும் பலவற்றுடன் இணைந்து இது இடுப்பை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்ய 10 வினாடிகள், 3 சுற்றுகள் இதை செய்யவும் என்று அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் கூறினார்.
இந்த ஸ்ட்ரெட்ச் நல்லது, முதுகு வலியிலிருந்து விடுபடலாம் என்று டாக்டர் சுதிர் குமார் (neurologist, Apollo Hospitals, Hyderabad) கூறினார். இருப்பினும், இந்த ஸ்ட்ரெட்ச் முதுகுவலியின் அனைத்து நிகழ்வுகளையும் தீர்க்காது மற்றும் சில சந்தர்ப்பங்களில் வலி மோசமாகலாம்.
தசைப்பிடிப்பு மற்றும் பலவீனமான தசைகள் காரணமாக முதுகுவலி இருந்தால், இந்த ஸ்ட்ரெட்ச் உதவும். மறுபுறம், முதுகு வலியின் பல நிகழ்வுகள் ஸ்லிப்டு டிஸ்க் மற்றும் அதன் விளைவாக இடுப்பு நரம்புகள் (முதுகில் இருந்து கால்களுக்குச் செல்லும்) சுருக்கம் காரணமாக ஏற்படுகிறது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், back extension exercises விரும்பத்தக்கவை.
வைட்டமின் டி குறைபாடு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக சில முதுகு வலி ஏற்படுகிறது. அடிப்படையான குறைபாட்டை நாம் சரி செய்யாவிட்டால் அல்லது தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், வலி நீங்காது.
எனவே, முதுகுவலியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் முதலில் ஒரு நரம்பியல் நிபுணர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும், இதன் மூலம் மூல காரணத்தை அடையாளம் காண வேண்டும். அதற்குப் பிறகு, மிகவும் குறிப்பிட்ட உடற்பயிற்சி மற்றும் வேறு எந்த மருத்துவ சிகிச்சையும் அறிவுறுத்தப்படலாம், என்று டாக்டர் குமார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“