குளூட்டன் இல்லாத பரோட்டா… இனி அடிக்கடி வீட்டில் செய்யலாம்

Sunday without parathas? A fool-proof technique to make them gluten-free: குளூட்டன் இல்லாத பரோட்டக்களை தினையைக் கொண்டு செய்யலாம். நமது சிறு தானியங்களில் பொதுவாகவே குளூட்டன் மிக குறைவாகவே இருக்கும். சிலவற்றில் இருக்காது.

பரோட்டா பிடித்தவர்கள் அதை அடிக்கடி வாங்கி சாப்பிடுவர். ஆனால் பரோட்டாவை எல்லோரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதிலுள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் மைதாவால் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் பரோட்டா பக்கம் எட்டி பார்க்கவே கூடாது. ஆனால் குளூட்டன் இல்லாத பரோட்டாக்களை செய்தால் எல்லோரும் பரோட்டாக்களை ஒரு பிடி பிடிக்கலாம். வாருங்கள் குளூட்டன் இல்லாத பரோட்டா செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

குளூட்டன் இல்லாத பரோட்டக்களை தினையைக் கொண்டு செய்யலாம். நமது சிறு தானியங்களில் பொதுவாகவே குளூட்டன் மிக குறைவாகவே இருக்கும். சிலவற்றில் இருக்காது.

சோளம் தினை பரோட்டா

தேவையான பொருட்கள்

1 கப் சோளம் தினை மாவு

1 கப் தண்ணீர்

எண்ணெய்- தேவையான அளவு

இமாலய இளஞ்சிவப்பு உப்பு- சிறிதளவு

சன்னா மசாலாவிற்கு தேவையான பொருட்கள்

½ கப் சன்னா

½ தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்

¼ தேக்கரண்டி மஞ்சள்

இமயமலை இளஞ்சிவப்பு உப்பு- தேவையான அளவு

அரை எலுமிச்சை சாறு

1 டீஸ்பூன் ஊறுகாய் எண்ணெய்

½ கப் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா

செய்முறை

ஒரு ஆழமான பாத்திரத்தில், தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.

இதனுடன் தினை மாவு சேர்த்து, நன்றாக கலந்துபின், அடுப்பை அணைக்கவும். பின்னர் தொடர்ந்து கலக்கவும்.

இந்த கலவையை சிறிது குளிர்விக்க வேண்டும், ஆனால் அறை வெப்பநிலையில் குளிர்விக்க வேண்டாம். இது சூடாக ஆனால் கையாள எளிதாக இருக்க வேண்டும். அதை மென்மையான மாவாக பிசைந்து கொள்ளவும். 5-10 நிமிடங்கள் காத்திருக்கவும்.

இந்த நேரத்தில் சன்னா மசாலாவை செய்து கொள்ளுங்கள்.

5 நிமிடங்களுக்குப் பிறகு மாவு நல்ல நிலையில் இருக்கும். அதை பரோட்டாக்களாக உருட்ட வேண்டும்.

பின்னர் பரோட்டாக்களை சுட்டு எடுத்து சன்னா மசாலாவுடன் ருசித்து சாப்பிடுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gluten free paratha recipe millet healthy eating

Next Story
கோவிட் 19 தடுப்பூசி போட வேண்டும் ஏன்? அதன் நன்மைகளை விளக்கும் டாக்டர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com