/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-2020-08-30T133532.793.jpg)
Gobi Manchurian Making Video Tamil
Gobi Manchurian Making Video Tamil: நம் வீட்டில் உள்ள எளிய பொருட்கள் மூலம் கோபி (அ) காலிஃப்ளவர் மஞ்சூரியன் எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்:
முழு காலிஃப்ளவர் - ஒன்று
சோளமாவு - 1/4 cup;
மைதா மாவு - 1/2 cup ;
மிளகு தூள் - சிறிதளவு;
எண்ணெய் - தேவையான அளவு ;
சில்லி சாஸ் - 1 Tea Spoon;
இஞ்சி;
பூண்டு;
வெங்காயம் - பெரியது;
குடை மிளகாய்;
உப்பு - தேவையான அளவு;
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், மேலே கூறப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, தண்ணீரை ஊற்றி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி பிசையவும். தண்ணீர் அதிகம் இருந்தால், காலிபிளவர் மாவில் ஒட்டாது.
மற்றொரு பாத்திரத்தில், காலிஃப்ளவர் சிறு துண்டுகளாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு, சுடுதண்ணீரில் உப்பு சேர்த்து காலிஃப்ளவரை போட்டு மெதுவாக (இல்லையேல் காலிஃப்ளவர் வெந்துவிடும்) கொதிக்க வைக்க வேண்டும்.
நாம், ஏற்கனவே தயார் செய்திருந்த மாவை, காலிஃப்ளவருடன் நன்கு பிசைய வேண்டும். எண்ணெய் சூடானதும் மாவால் பிசைக்கப்பட்ட காலிஃப்ளவரை பொரித்தெடுக்க வேண்டும்.
கிரேவி செய்தல்:
பின்பு, ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் , சிறிது சிறுதாக நறுக்கிய ஒரு டீ ஸ்பூன் இஞ்சி மற்றும் பூண்டு, பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு, நன்கு வதந்ததும், குடை மிளகாய் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். 2 டீ ஸ்பூன் சில்லி சாஸ், 2 டீ ஸ்பூன் தக்காளி சாஸ், கம்மியான சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளரி கிரேவியாக கொண்டு வர வேண்டும்.
இப்போது, முன்பு நாம் பொரித்து வைத்திருந்த காலிஃப்ளவரை கிரேவியோடு நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். நாம், ஆசைப்பட்ட கோபி மஞ்சூரியன் ரெடி! உங்கள் குடும்பத்தார், மற்றும் சுற்றத்தாருக்கு கொடுத்து மகிழலாம்.
source : chennai samayal
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.