சுவையான காலி ஃப்ளவர் பராத்தா எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
காலிஃப்ளவர் துருவியது - 1 கப்
வெங்காயம்- 1
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை
முதலில் பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் எப்போதும் போல் 20 நிமிடம் மூடி ஊற விடவும்.
அதற்குள் மற்றொரு பாத்திரத்தில் துருவிய காலி ஃப்ளவர், வெங்காயம், மிளகாய்தூள், சீரகத்தூள், கரம்மசாலாதூள், ஆம்சூர் பவுடர், உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஊற வைத்த சப்பாத்தி மாவு எடுத்து உருண்டைகளாகப் பிடித்து சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும். இப்போது அதன் நடுவில் காலி ஃப்ளவர் மசாலா கலவையை வைத்து மூடவும்.
அடுப்பில் சப்பாத்தி கல் வைத்து இந்த பராத்தாவை வைக்கவும், எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறலாம். அவ்வளவு தான் சுவையான காலி ஃப்ளவர் பராத்தா ரெடி. தேவைப்பட்டால் சட்னி அல்லது தயிர் வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“