godhuma parotta recipe wheat parotta tamil : கோதுமை பரோட்டா கோதுமையைப் பயன்படுத்தி, வீட்டில் செய்யப்படும் அருமையான உணவு
Advertisment
ஆரோக்கியமான முறையில் கோதுமையைப் பயன்படுத்தி கோதுமைப் பரோட்டா வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
என்னென்ன தேவை?
Advertisment
Advertisements
கோதுமை மாவு – 1 கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கோதுமை, உப்பு, நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக பிரித்து, ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி பலகையில் எண்ணெய் தடவி திரட்டவும். அதன் மீது எண்ணெய் தடவி சிறிது கோதுமை மாவை தூவி, இரு பக்கமும் பிடித்துக் கொண்டு விசிறி போல் மடித்து வட்டமாக சுருட்டவும். இதை உள்ளங்கையில் வைத்து அழுத்தி சற்று கனமான பராத்தாவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
கண்ணைமூடிக் கொண்டு சுவையான உணவு எது என்றால் பரோட்டாவிற்கு முதலிடம். சுவைக்காக உண்போரே அதிகம். சைவம், அசைவம் இருதரப்பினரையும் திருப்தியடையச் செய்யும்.
பரோட்டாவின் தாயகம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கேரளம் அல்லது தென்னகத்தில்தான் தோன்றி இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரோட்டா என்றால் மிகவும் பிடித்தமான உணவாக உள்ளது