உங்கள் வீட்டில் இருக்கும் பழைய, மங்கலான தங்க நகைகளை மீண்டும் பளபளக்க வைக்க வேண்டுமா? கடைகளுக்குச் சென்று பாலிஷ் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே மிக எளிய முறையில் உங்கள் நகைகளை புதிது போல் மின்னச் செய்யலாம். இதோ ஒரு எளிய வழிமுறை:
தேவையான பொருட்கள்:
Advertisment
பால் மஞ்சள் தூள் டிஷ்வாஷ் லிக்விட் பழைய டூத் பிரஷ்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் மங்கலான தங்க நகைகளைப் போடுங்கள். இத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் எந்த பிராண்ட் பாத்திரம் கழுவும் திரவத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த கலவையில் நகைகளை சுமார் அரை மணி நேரம் ஊற விடவும்.
அரை மணி நேரம் கழித்து, ஒரு பழைய டூத் பிரஷை எடுத்து, நகைகளை மெதுவாகத் தேய்க்கத் தொடங்குங்கள். மோதிரங்கள் போன்ற தினசரி அணியும் நகைகளில், இடுக்குகளில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். பிரஷ் கொண்டு தேய்க்கும்போது இந்த அழுக்குகள் எளிதாக நீங்கிவிடும். குறிப்பாக, டிசைன்கள் நிறைந்த நகைகளில் இடுக்குகளில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில், உணவு உண்ணும்போது அவை வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.
நன்றாகத் தேய்த்த பிறகு, நகைகளை சுத்தமான தண்ணீரில் நன்கு அலசவும். இப்போது உங்கள் பழைய நகைகள் புதியவை போல பளபளப்பதைப் பார்க்கலாம்!