காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம் என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
Advertisment
அதில் ஒன்று கோமதி சக்கரம்.
இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்தது. துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் இதன் வேறு பெயர்கள்.
கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.
திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் இந்த கோமதி சக்கரத்தை பூஜை அறையில் எப்படி வைத்து வணங்குவது என்பது குறித்து பிரபல பாடகி அனிதா குப்புசாமிதன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“