ஆரோக்கியம், சுவை; கோங்குரா பருப்பு குழம்பு: ஆந்திரா ஸ்பெஷல் இப்படி செய்யுங்க

கோங்குரா பருப்பு குழம்பு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

கோங்குரா பருப்பு குழம்பு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
பாசிப் பருப்பு- வெந்தயக் கீரை கூட்டு: இப்படிச் செஞ்சா ஒரு பிடி பிடிப்பீங்க!
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பருப்பு குழம்பு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

புளிச்ச கீரை- 1 கட்டு
துவரம் பருப்பு- கால் கப் 
சீரகம்-1 ஸ்பூன் 
கடுகு- கால் டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய்- 5 
பச்சை மிளகாய்- 5 
வெங்காயம்- 2
பூண்டு- 10 
தக்காளி- 1 
புளி- சிறிதளவு 
பெருங்காயம்- 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை- தேவையான அளவு 

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் குக்கரில் துவரம்பருப்பு, புளிச்ச கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து கலந்து ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் ஏற்கனவே வேகவைத்து எடுத்துள்ள புளிச்ச கீரை பருப்பு கடையலை இதில் சேர்க்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான , ஆரோக்கியமான ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா பருப்பு ரெடி. சூடு சாப்பாட்டில் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு மிகவும் நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: