Advertisment

Good Friday 2022:  புனித வெள்ளி.. சிலுவையில் வெளிப்பட்ட அன்பின் ரகசியம்!

அனைவரின் மீதும் கொண்ட அன்பின் காரணமாக, இயேசு கிறிஸ்து மக்களின் பாவங்களுக்காக தனது உயிரை தியாகம் செய்தார். அவர் அனைவரையும் நேசித்தார்.

author-image
WebDesk
New Update
Good Friday 2022,Holy Friday 2022,15 April 2022

Good Friday 2022, The Holy Day

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு புனித வெள்ளி ஒரு முக்கியமான நாள், அன்று ஜெருசலேமுக்கு வெளியே உள்ள கல்வாரியில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை கிறிஸ்துவர்கள் நினைவு கூறுவர்.

Advertisment

புனித வெள்ளி தேதி’ ஒவ்வொரு ஆண்டும் நவீன கிரிகோரியன் மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் மாறுபடும். இந்த ஆண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில், பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு விரதங்களைக் கடைப்பிடிக்கின்றனர். பல நாடுகளில், இது ஒரு விடுமுறையாக கருதப்படுகிறது.

இந்த நாளில்தான் கிறிஸ்து கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். அனைவரின் மீதும் கொண்ட அன்பின் காரணமாக, இயேசு கிறிஸ்து மக்களின் பாவங்களுக்காக தனது உயிரை தியாகம் செய்தார். அவர் அனைவரையும் நேசித்தார். மனிதகுலத்தின் பாவங்களுக்காக அவர் மிகவும் துன்பங்களை அனுபவித்தார்.

இதன் காரணமாகவே மனிதகுலம் ஒரு புதிய தொடக்கத்தைப் பெற்றது. அவர்களின் அனைத்து பாவங்களும் நிராகரிக்கப்பட்டன. மேற்கூறிய சிலுவை மரணம் கிபி 30 அல்லது கிபி 33 இல் நடந்ததாக கூறப்படுகிறது.

இயேசுவின் உடலை அரிமத்தியாவைச் சேர்ந்த ஜோசப் போர்த்தி எடுத்து, அவருடைய சொந்த கல்லறையில் வைத்தார்.

புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாலும், பைபிளின் படி, கடவுளின் மகன் உயிர்த்தெழுப்பப்பட்டது ஈஸ்டர் அன்றுதான். நன்மை எப்போதும் வெல்லும் என்பதை காட்டுகிறது.

Happy Good Friday 2022,The Holy Friday, Good Friday

இந்த புனிதமான நாளில் புனித வெள்ளியில், உலகெங்கிலும் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில வாழ்த்துகள் இங்கே!

publive-image

இந்த அற்புதமான நாளில், கடவுளின் அன்பு உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் நிரப்பும் என்று நாங்கள் நம்புகிறோம்.

publive-image

அவர் மனித குலத்திற்காக இரத்தம் கசிந்து இறந்தார். அவரது தியாகத்தை எதுவும் வெல்ல முடியாது. அவர் தகுதியான நம்பிக்கையை நாம் வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.

publive-image

அவர் உங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், நித்திய அன்புடனும் மகிழ்ச்சியுடனும் உங்கள் வாழ்க்கையைச் சூழ்ந்திருக்க இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.

publive-image

உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட புனித வெள்ளி வாழ்த்துக்கள். உங்கள் எல்லா பிரச்சனைகளையும் விட உங்கள் நம்பிக்கை வலுவாக இருக்க நான் பிரார்த்திக்கிறேன்.

publive-image

இறைவனின் ஆசீர்வாதங்கள் எப்போதும் வைரங்களைப் போல உங்கள் மீது பிரகாசிக்கட்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment