/indian-express-tamil/media/media_files/2025/04/18/Qz18f1d3eJAXanD0xvZY.jpg)
குட் ப்ரைடே (Good Friday) என்ற பதமானது காட்ஸ் ப்ரைடே (God's Friday) என்ற பதத்தில் இருந்து வருகிறது என்று சிலர் நம்புகின்றனர். குட் (Good) என்றால் இங்கு ஹோலி (Holy) அல்லது புனிதம் என்று பொருள் என்று சிலர் கருதுகின்றனர்.
கிறிஸ்தவத்தில் புனித வெள்ளியானது மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. நாம் எவ்வளவுதான் துன்பங்களையும், சோதனைகளையும் சந்தித்தாலும், இறுதியில் தீமையின் மீது நன்மையே வெற்றி பெறும்
என்ற உண்மையை ஒவ்வொரு ஆண்டும் வரும் இந்த புனித வெள்ளியானது நமக்கு நினைவூட்டுகிறது.
புனித வெள்ளியன்று ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுகின்றனர் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும்.
புனித வெள்ளியானது ஒவ்வொருவருக்கும் ஒரு
புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. என்ற நம்பிக்கையோடு கிறிஸ்தவ மக்கள் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
புனித வெள்ளி: புதுச்சேரி பிரெஞ்சு தேவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு pic.twitter.com/cYD5h9Bw5y
— Indian Express Tamil (@IeTamil) April 18, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.