திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? : இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி..
Tirupati news in Tamil : திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்ய செல்லும் அனைவருக்கும் இலவசமாக ஒரு லட்டு பிரசாதமாக வழங்க தேவஸ்தானம் முன்வந்துள்ளது. இந்த நடைமுறை தற்போது அமலாகியுள்ளது.
Tirupati news in Tamil : திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்ய செல்லும் அனைவருக்கும் இலவசமாக ஒரு லட்டு பிரசாதமாக வழங்க தேவஸ்தானம் முன்வந்துள்ளது. இந்த நடைமுறை தற்போது அமலாகியுள்ளது.
Advertisment
திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் குறைந்தது 80 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். புரட்டாசி, பிரம்மோற்சவம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டுகிறது.
மனசு ஒரு மாதிரி இருக்கு, போயி ஏழுமலையானை தரிசிட்டு வருவோம்னு நிறைய பேரு திருப்பதிக்கு கிளம்பிப்போவாங்க. அவங்களுக்கு மனதுக்கு திருப்தி அளிப்பதுமாதிரியான திருப்பங்கள் ஏற்படுதோ இல்லையோ, இனி அவர்கள் திருப்பதி சென்றால், நிச்சயமாக அவர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக கிடைக்கும்.
ஏழுமலையானை, கீழ்திருப்பதியான அலிபிரியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு செய்யும் தரிசனத்திற்கு திவ்ய தரிசனம் என்று பெயர். இந்த தரிசனம் மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே, இதுவரை ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. இனி இந்த பாகுபாடு அகற்றப்பட்டு, ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைவருக்கும் ஒரு லட்டு பிரசாதமாக வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டு அதை நடைமுறைப்படுத்தியும் உள்ளது.
தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும் இலவச லட்டு வழங்கும் திட்டத்தை தேவஸ்தானம் கடந்த 2019 இறுதியில் வகுத்தது. அப்போது லட்டு விலையில் மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அனைவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கும் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. லட்டு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை ; ஒரு லட்டின் விலை ரூ.50 என்ற விலையிலேயே நீடிக்கிறது.
திருப்பதி கோயிலின் வெளிப்புறங்களில் செயல்பட்டு வரும் லட்டு கவுண்டர்களில் ஒரு லட்டு ரூ.50 வீதம் எத்தனை லட்டுகளும் வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.