சரியான தூக்கமே இல்லையா? இந்த ஐந்து விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்!

Good nights sleeping health skincare Tamil News அவை ஒளியைத் தடுப்பது மட்டுமல்லாமல், வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற சத்தத்தை வெளியிலிருந்து தடுக்கவும் உதவுகின்றன.

Good nights sleeping health skincare Tamil News
Good nights sleeping health skincare Tamil News

Good nights sleeping health skincare Tamil News : தூக்கம் என்பது அன்றாட செயல்பாட்டின் ஒரு முக்கிய அம்சம். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல் ஒருவரின் மன ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக உள்ளது. உயிரணு வளர்ச்சியை அனுமதிப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

தூக்கமின்மை உங்கள் உள் உடல் கடிகாரத்தைக் குழப்பலாம் மற்றும் சருமத்தில் பிரதிபலிக்கும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். லிவ்பியூரின் மார்க்கெட்டிங் பொது மேலாளர் அங்கித் கவுர், ஒழுங்கற்ற தூக்க முறைகள் அல்லது குறைவான தூக்கம் உங்களை சமச்சீரற்ற, நீரிழப்பு மற்றும் முகப்பரு, சுருக்கங்கள், வடுக்கள் உள்ளிட்ட மந்தமான சருமத்தை ஏற்படுத்துகிறது கூறினார்.

உங்கள் வாழ்க்கையில் சில அத்தியாவசியங்களைச் சேர்ப்பதன் மூலம், தரமான தூக்கத்தைப் பெறலாம். அதனை உறுதி செய்வதற்கான சில வழிகளை அவர் பட்டியலிடுகிறார்.

தரமான மெத்தை

தரமற்ற மெத்தை, வலி மற்றும் குறைந்த தூக்கத்தைத்தான் ஏற்படுத்தும். நல்ல தூக்கத்தை உறுதி செய்வதற்கான சிறந்த வழி, பயனர்களுக்கும் இந்த உலகத்திற்கும் பயனளிக்கும் ஒரு சிறந்த தரமான மெமரி ஃபோம் மற்றும் ஆயுர்வேத மெத்தைகளில் முதலீடு செய்வதுதான். சரியான மெத்தையில் தரமான தூக்கம் உங்கள் உடலின் உள்ளேயும் வெளியையும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அரோமாதெரபி அல்லது மிஸ்ட் ஸ்ப்ரேக்கள்

அவை போதுமான மற்றும் நல்ல தரமான தூக்கத்தை வழங்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, லாவெண்டர் வாசனையைப் பயன்படுத்துவது தூக்க முறைகளை மேம்படுத்தலாம். அவை ஆரோக்கியமான சருமத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மனதை அமைதிப்படுத்தவும் உதவுகின்றன. எனவே, உங்களுக்கு ஒரு ஆற்றல்மிக்க காலை கிடைக்கும்.

பட்டுத் தூக்க மாஸ்க்

உங்கள் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு நல்ல தரமான பட்டுத் தூக்கக் கண் மாஸ்க்கில் நீங்கள் முதலீடு செய்யலாம். பட்டு கண் முகமூடிகள் மென்மையானவை. இது உங்கள் முகம் சுருக்கங்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும், நீங்கள் பட்டு தலையணை மற்றும் படுக்கைகளைப் பயன்படுத்தவும் முயற்சி செய்யலாம்.

ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி

நீண்ட, அழுத்தமான நாளுக்குப் பிறகு, தூக்கம் எளிதாக வரும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால், மன அழுத்தம் நம்மைத் தூங்க விடாமல் தடுக்கும் நேரங்கள் உள்ளன. இங்குதான் ஆழ்ந்த மூச்சு நுட்பங்கள் உதவுகின்றன. 4-7-8 போன்ற நுட்பங்கள் இதயத் துடிப்பைக் குறைத்து மன அழுத்தத்திலிருந்து உங்கள் கவனத்தை மாற்ற உதவுகின்றன.

இருட்டடிப்பு கர்டெயின்ஸ்

உங்கள் தூக்கத்தில் வெளிப்புற வெளிச்சத்தைத் தடுக்க உங்கள் படுக்கையறையில் இருட்டடிப்பு அல்லது அறை கருமையாக்கும் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். அவை ஒளியைத் தடுப்பது மட்டுமல்லாமல், வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற சத்தத்தை வெளியிலிருந்து தடுக்கவும் உதவுகின்றன.

இவை தவிர, படுக்கையில் ஒரு புத்தகம் அல்லது பத்திரிகை படிப்பது, தியானம், யோகா செய்வது, ஒரு பத்திரிகை வைத்திருத்தல், மென்மையான இசையைக் கேட்பது அல்லது ஒரு சூடான குளியல் போன்ற விஷயங்கள் நிம்மதியான தூக்கத்திற்கு உதவும். இதனால், நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக எழுந்திருக்க முடியும்” என்று கவுர் முடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Good nights sleeping health skincare tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express