கி.மு 46 இல் ஜூலியஸ் சீசர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களால் லீப் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி 12 ஆண்டு முதல் இந்த கணக்கு மிகவும் துல்லியமாக்கப்பட்டது.
Google Doodle Leap Day : 2020 ஆம் ஆண்டு ஒரு 'லீப் ஆண்டு'. ஏனெனில், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 29 நாட்கள் கொண்டிருக்கும் (28 க்கு பதிலாக). இதனால், இந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கை நாட்கள் 366 ஆக உள்ளது (365 நாட்களுக்கு பதிலாக).
Advertisment
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் 29 என்கிற தேதி வரும். இந்த லீப் ஆண்டு நாளை கொண்டாடும் வகையில் கூகுள் ஒரு “ஜம்பிங்” டூடுலை வெளியிட்டுள்ளது.
கி.மு 46 இல் ஜூலியஸ் சீசர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களால் லீப் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி 12 ஆண்டு முதல் லீப் ஆண்டு மிகவும் துல்லியமாக கணிக்கப்பட்டது .
லீப் ஆண்டுகள் எப்போதுமே (2016, 2020, 2024,2028.) நான்கின் பெருக்கங்களாக இருக்கின்றன. அதற்காக , நான்கு பெருக்கங்களாக இருக்கும் அனைத்து ஆண்டையும் நாம் லீப் ஆண்டு என்று சொல்லிவிடமுடியாது. சில விதிவிலக்குகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக, 1900, 2100 போன்ற நான்கின் பெருக்கங்கள் கொண்ட ஆண்டுகள் லீப் ஆண்டுகள் கிடையாது.
பூமியின் பருவங்களுக்கு ஒத்துப்போகும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நமது காலண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே,காலெண்டரில் உள்ள நாட்களின் எண்ணிக்கை சூரியனைச் சுற்றுவதற்கு பூமிக்குத் தேவையான நேரத்துடன் பொருந்த வேண்டும்.
பூமி அதன் சுற்றுப்பாதையின் வழியாக சூரியனைச் சுற்றி முடிக்க சுமார் 365.242 நாட்கள் ஆகும். இருப்பினும், எளிமையின் காரணமாக பூமியின் ஒரு ஆண்டுக்கணக்கை 365 நாட்கள் என்று எடுத்துக்கொள்கிறோம். விடுப்பட்ட 0.242 நாட்களை சரிசெய்ய, ஒவ்வொரு நான்கு வருடத்திற்கும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூட்டப்படுகிறது ( 4*0.242 =.968 ~ 1 day )
லீப் ஆண்டு காலங்களில் வரும் கம்ப்யூட்டிங் சிக்கலை லீப் ஆண்டு பிழை என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 29 தேதிகளை கையாளும் தர்க்கத்தில் சரியாக கையாளப்படாதபோது கம்ப்யூட்டிங் இந்த பிழை ஏற்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”