Advertisment

கூகுளின் கலக்கல் டூடுல் முதல் டிடியின் மெசேஜ் வரை – உலக மகளிர் தின கொண்டாட்டங்கள்

Google doodle Kareena Kapoor DD special story womens day wishes பெண்கள் எடுத்துக்கொண்ட வலிமையையும் கடின உழைப்பையும் சித்தரிக்கிறது.

author-image
WebDesk
New Update
கூகுளின் கலக்கல் டூடுல் முதல் டிடியின் மெசேஜ் வரை – உலக மகளிர் தின கொண்டாட்டங்கள்

Women's Day special celebrations Google Doodle, DD, Kareena Tamil News : உலக மகளிர் தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை திரைத்துறை பிரபலங்கள் முதல் கூகுள் வரை இந்த தினத்தை விமர்சையாகக் கொண்டாடியுள்ளனர்.

Advertisment

2021-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கூகுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வீடியோ மூலம் பெண்களைப் போற்றியது. இந்த வீடியோவில் கல்வி, அறிவியல், கலை, சிவில் உரிமைகள் மற்றும் பல துறைகளில் தடைகளை உடைத்து தங்கள் இலக்குகளை எட்டிய முதல் பெண் முன்னோடிகளின் நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வீடியோ டூடுலின் முடிவில், பெண்களின் கைகள் வானத்தில் உயர்த்தி காண்பிப்பதன் மூலம், அவர்களின் கனவுகளை வெல்லவும், பெண்களின் தலைமுறைகளுக்குக் கதவுகளைத் திறக்கவும் அவர்கள் எடுத்துக்கொண்ட வலிமையையும் கடின உழைப்பையும் சித்தரிக்கிறது. இவ்வாறு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் பெண்களுக்கு மரியாதை செலுத்தியது.

பாலிவுட் ஸ்டைல் ஐகான் கரீனா கபூர், சர்வதேச மகளிர் தினத்தன்று சமீபத்தில் பிறந்த தன்னுடைய இரண்டாவது மகனின் முதல் புகைப்படத்தை முதல் முறையாகப் பகிர்ந்துள்ளார். கரீனாவின் தோள்பட்டையில் சாய்ந்தபடி குழந்தை இருக்க அதனை செல்ஃபி எடுத்து தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் இந்த போஸ்ட் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த கியூட் புகைப்படத்தோடு, "பெண்கள் செய்ய முடியாதது எதுவும் இல்லை. அனைவர்க்கும் என் பெண்கள் தின வாழ்த்துக்கள்" என்ற கேப்ஷனையும் இணைத்திருக்கிறார் கரீனா.

மாலத்தீவின் பல திகில் அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துகொண்ட டிடி, மகளிர் தினத்தையொட்டி ஸ்பெஷல் காணொளி ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் 'குட்டி ஸ்டோரி' பாடல் ஒலிக்க, வெவ்வேறு வாசகம் எழுதியிருக்கும் ஒவ்வொரு அட்டையாகக் காண்பித்தபடி மகளிர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்திருக்கிறார் டிடி. அதில், "36 வயது ஆகிறது ஆனால், தனியாக வாழ்கிறேன். நான் விவாகரத்தானவள் மற்றும் குழந்தை இல்லாதவள். என்றாலும் நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் வித்தியாசமானது" எனக்கூறி தன் மகளிர் தின வாழ்த்தையும் பதிவிட்டிருந்தார்.

மேலும், "எல்லோருடைய வாழ்க்கையும் வித்தியாசமானது

உங்கள் காலவரிசையை அனுபவியுங்கள்

சமூகத்தின் காலவரிசை உங்களைத் தோல்வியாகத் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள் ...

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்" என்ற கேப்ஷனையும் இணைத்திருக்கிறார் டிடி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Google Dd Womens Day Kareena Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment