வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த நெல்லிக்காயில் சுவையான லட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதோடு நெல்லிக்காய் சாப்பிட்டு வர அடர்த்தியான கூந்தல், முகப்பொலிவு பெறலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய்- 10
நாட்டு சர்க்கரை , வெல்லம்- 250 கிராம்
ஏலக்காய் பொடி- 1 ஸ்பூன்
நட்ஸ் வகைகள்- தேவையான அளவு
நெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். 1 இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காயை வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். அதன்பிறகு நெல்லிக்காயை துருவி தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது அடி கனமான பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கவும். நெல்லிக்காய் மற்றும் சர்க்கரை ஒன்று சேர்ந்து திக்கான பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறவும்.
இதில் ஏலக்காய் பொடி மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்த்து கலக்க வேண்டும். கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் வந்த உடன் அடுப்பை அணைத்து ஆற விடவும். கைகளில் சிறிதளவு எண்ணெய் (அல்லது) நெய் தடவி சிறிய உருண்டைகளாக உருட்டவும். அவ்வளவு தான் சுவையான நெல்லிக்காய் லட்டு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“