கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியர் கெளசல்யாவிற்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தான் ஓவிய ஆசிரியராக 33 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறேன். இந்த ஆசிரியர் பணியை ஒரு வேலையாக கருதாமல் ஒரு சேவையாகவே செய்து வருகிறேன்.
நான் ஓவியப் பயிற்சி அளித்த எனது பள்ளி மாணவர்கள் வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளனர். அது மட்டும் இன்றி 50"ககும் மேற்பட்ட எழை குழந்தைகளுக்கு இலவசமாக ஓவிய பயிற்சி அளித்து வருகிறேன்.
என்னால் முடிந்த வரை ஏழை மாணவர்களுக்கு படிப்புகள் சம்பந்தமான உதவிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். சமூக சேவைகளின் முக்கியத்துவத்தை குறித்து எனது பள்ளி குழந்தைகளுக்கு கூறி வருகிறேன். தற்போது என்னுடைய சேவைகளை அங்கீகரித்த ஆல் இந்தியா எண்ட்வைன்ட் பவுண்டேஷன் சிறந்த ஆசிரியருக்கான விருதை மற்றும் முனைவர் பட்டம் அளித்துள்ளது. இதற்காக இந்த பவுண்டேஷனின் தலைவர் கதிர்வேல் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு ஆசிரியர் கெளசல்யா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“