New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/12/jzScV55A0XiLFanytHM6.jpg)
சிவகங்கையில் அமைந்துள்ள கம்பர் கோயில் திருவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் இருக்கும் கம்பர் சமாதி அருட்கோயிலில் நான்காம் நாள் பங்குனி அத்தத் திருவிழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக, காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் விழாவின் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, கம்பன் கழகத்தினர் பாரம்பரிய கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு வழங்கினர்.
பின்னர், கம்பர் சன்னதியில் தீபாராதனை நடைபெற்றது. ஆளுநர் ஆர். என். ரவி, தாமரை மலர் சமர்ப்பித்து கம்பரை வணங்கி, அங்கு நடைபெற்ற கம்பர் புகழ் கம்பராமாயண பாராயணத்தை கேட்டார்.
இந்த விழாவின் இறுதியில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், கம்பன் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.