காலை உணவாக தானியம் : நோய்களுக்கு வைப்போமே சூனியம்!!!

முழு தானியங்களில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிகமான நார்ச்சத்தும் அதில் உள்ளது. இந்த நார்ச்சத்து, நமது உடலின் செரிமான செயல்களுக்கு அத்தியாவசியமாக உள்ளது.

உணவில் , முழு தானியங்களின் பங்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாது ஒருமுறை சுவைத்தால், மீண்டும் மீண்டும் சாப்பிட வைக்கும் ருசியையும் உணவிற்கு அது அளித்திடும். அப்படி எல்லாம் இருந்தும் கூட நம்மில் பலருக்கும் முழு தானியங்கள் என்றாலே தெரிவது பழுப்பு ரொட்டியும் பழுப்பு அரிசியும் மட்டுமே. ஆனால் அதையும் மீறி முழு தானியங்களை பற்றி தெரிந்து கொள்ள பல உள்ளது என புது டெல்லியில் உள்ள ராக்லாண்ட் மருத்துவமனையில் மூத்த உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை நிபுணரான சுனிதா ராய் சவுத்ரி கூறுகிறார்….

முழு தானிய உணவுகள் என்றால் என்ன? தவிடு நீக்கப்படாத தானியங்களையே முழு தானியம் என்கிறோம். . பல தானியங்களில், அதன் ஊட்டச்சத்துக்கள், அவைகளை மூடியுள்ள தவிட்டில் தான் உள்ளதன. தானியங்களை சுத்திகரிக்கும் போது, அதன் மேலுள்ள தவிடு நீக்கப்பட்டுவிடுவதால், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடுகின்றன..

முதன்மையான 10 முழு தானிய உணவுகள் 1. கோதுமை 2. பழுப்பு அரிசி 3. ஓட்ஸ் 4. பார்லி 5. சோளம் 6. கம்பு 7. சோளப் பயிர் வகை 8. கம்பு வகை 9. கேழ்வரகு 10. தினை

மேல் தோல் நீக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்களில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிகமான நார்ச்சத்தும் அதில் உள்ளது. இந்த நார்ச்சத்து, நமது உடலின் செரிமான செயல்களுக்கு அத்தியாவசியமாக உள்ளது. முழு தானியங்கள் சுலபமாக செரிமானமாகும். அவைகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் அதிகமாக உள்ளது. மேலும் புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல நோய்களையும் அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.

ஒன்று அல்லது இரண்டு சப்பாத்திகள் இல்லாமல் எந்த ஒரு இந்திய உணவும் முழுமை பெறாது. அதனால் முழு தானியங்களை உங்கள் சப்பாத்திகளில் இருந்து தொடங்குங்கள். சாதாரண மாவுக்கு பதிலாக முழு கோதுமை, சோளம், கம்பு அல்லது கேழ்வரகு போன்ற அதிகப்படியான பயனை அளிக்கூடிய முழு தானியங்களை பயன்படுத்தி இனி சப்பாத்திகளை தயார் செய்யுங்கள்.
முழு கோதுமை ரொட்டிகள், ஓட்ஸ், கோதுமை ஃப்ளேக்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் மற்றும் தினை போன்றவற்றை ஆரோக்கியமான காலை உணவு தானியங்களாக பயன்படுத்தலாம். கம்பு தானியத்தில் செய்யப்பட ரொட்டிகளையும் கூட உண்ணலாம். முழு கோதுமை பிட்சா கூட இப்போது கிடைக்கிறது.

பழுப்பு அரிசி மற்றும் கேழ்வரகை கொதிக்க வைத்தோ அல்லது அவித்தோ அதிலிருந்து இட்லி கூட செய்யலாம்.
முழு கோதுமையில் செய்யப்பட்ட பாப்கார்ன் கூட ருசிமிக்க, ஆரோக்கியமான உணவாக அமையும். இருப்பினும், அதில் உப்பு, சர்க்கரை அல்லது பிற கொழுப்பு பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
கோதுமை ஓட்ஸ் இப்போதெல்லாம் கோதுமையில் கலக்கப்பட்ட ஓட்ஸ் அல்லது பிற முழு தானியங்களை கொண்டு கூட கேக், பேஸ்ட்ரி போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

கோதுமை பாஸ்தா முடிந்தால் முழு கொழுமை பாஸ்தாவை கூட தேர்ந்தெடுங்கள். இருப்பினும் அவைகள் உங்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றால் முழு கோதுமையுடன் ரீஃபைன் செய்யப்பட்ட பாஸ்தாவை முயற்சி செய்யவும். எந்த ஒரு உடல் எடை குறைப்பு திட்டத்தையும் கையில் எடுக்காமல் ஆரோக்கியமான பாஸ்தா சாப்பிடுவது சிறந்த வழியாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close