வீட்டில் இருப்பவர்களுக்கு நெஞ்சு சளி வைத்தியம் எளிய முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெற்றிலை
பச்சை கற்பூரம்
செய்முறை
ஒரு கரண்டியில் பச்சை கற்பூரம் சிறிது எடுத்து நெருப்பில் காட்டி நன்கு கரைய வைக்கவும். சூடாகி கரைந்ததை அறிய கரண்டியில் உள்ள பச்சை கற்பூரம் சூட்டில் ஆவி பறந்து நல்ல மணம் வீசும்.
பின்னர் ஒரு வெற்றிலை எடுத்து அதில் இந்த பச்சை கற்பூரம் கரைசலை தடவி விடவும். பின்னர் அந்த வெற்றிலை இதமான சூடாகும் வரை நெருப்பில் வாட்டி அப்படியே எடுத்து நெஞ்சு மேல் பத்து போல் போட்டு கொள்ள வேண்டும்.
இதனை இரவில் தூங்கும்போது தான் செய்ய வேண்டும். மேலும் இப்படி செய்வதன் மூலம் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி இலகி வெளியேறும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“