நரைமுடி நீங்கி, தலைமுடி கரு கருவென வளரும்… வீட்டிலேயே இப்படி எண்ணெய் செய்து யூஸ் பண்ணுங்க; டாக்டர் நித்யா

தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய மூலிகை எண்ணெய் பற்றி மருத்துவர் நித்யா கூறுகிறார்.

தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய மூலிகை எண்ணெய் பற்றி மருத்துவர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Hair Growth hair oil homemade

நரைமுடி நீங்கி, தலைமுடி கரு கருவென வளரும்… வீட்டிலேயே இப்படி எண்ணெய் செய்து யூஸ் பண்ணுங்க; டாக்டர் நித்யா

தலைமுடி உதிர்தல் மற்றும் முடி வளர்ச்சி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பயனுள்ள சித்த மருத்துவ முறைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார் மருத்துவர் நித்யா. அவரது சமீபத்திய யூடியூப் வீடியோவில் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சக்திவாய்ந்த மூலிகை எண்ணெயை பற்றி விரிவாகப் பேசியுள்ளார். இந்த எண்ணெய் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும். இந்த ஹேர் ஆயிலின் சிறப்பம்சம் என்னவென்றால், இது முற்றிலும் இயற்கையானது மற்றும் பக்க விளைவுகள் இல்லாதது. வீட்டில் முறையாக தயாரித்து பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தை உணர முடியும் என்று உறுதியளிக்கிறார் மருத்துவர் நித்யா. 

தேவையான மூலிகைகள்:

Advertisment
  • பிஞ்சு கடுக்காய், மகிழம்பூ: உடல் உஷ்ணத்தை குறைத்து, கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. பித்தத்தை குறைத்து உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டது.
  • கருப்பு எள்: முளைக்கட்டிய கருப்பு எள் இந்த எண்ணெயில் சேர்க்கப்படுகிறது. கூந்தலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது.
  • சூரியகாந்தி விதைகள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஹைலூரானிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. இது தோல் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது. 
  • கற்றாழை: கூந்தலுக்கு ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. ஜெல் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.
  • எலுமிச்சை: முழு எலுமிச்சையையும் தோலோடு அரைத்து பயன்படுத்தப்படுகிறது. கூந்தலை சுத்தப்படுத்தவும், பளபளப்பாகவும் வைக்க உதவும்.
  • ஆலம் விழுது: ஆலமரத்தின் விழுதுகளை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்க்கப்படுகிறது.
  • வெட்டிவேர்: நறுமணமும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.

இந்த மூலிகைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை இந்த தைலத்தை தயாரித்தால், 8 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

செய்முறை: பிஞ்சு கடுக்காய் மற்றும் மகிழம்பூவை பொடி செய்து கொள்ளவும். முளைக்கட்டிய எள் மற்றும் சூரியகாந்தி விதைகளை நன்கு அரைத்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளவும். கற்றாழை ஜெல்லை தனியாக எடுக்கவும். எலுமிச்சையை தோலோடு சேர்த்து அரைத்து பேஸ்ட் ஆக்கவும். ஆலம் விழுது மற்றும் வெட்டிவேரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக சேர்த்து, தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ச்சவும். சூரியகாந்தி விதை 300 கிராம், மற்ற மூலிகைகள் தலா 200 கிராம் செய்தால், சுமார் 2 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். தேவைக்கு ஏற்ப அளவுகளை குறைத்துக்கொள்ளலாம். எண்ணெயை இரும்பு பாத்திரத்தில் விட்டு, மூலிகைகளை சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் வரை மிதமான தீயில் காய்ச்சவும். ஒருநாள் முழுவதும் அப்படியே வைத்திருந்து, பின்னர் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

Advertisment
Advertisements

இந்த மூலிகை எண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது என்கிறார் மருத்துவர் நித்யா. 

இந்த எண்ணெயின் பயன்கள்: தலைமுடியில் உள்ள பொடுகை நீக்கும், பலவீனமான ஹேர் பாலிக்கிள்ஸை வலுப்படுத்தும், தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும், நரைமுடி பிரச்சனையை குறைக்க உதவும், தலைக்கு குளிர்ச்சியைத் தரும், மன அழுத்தத்தை குறைக்கும், மூட் ஸ்விங்ஸ் மற்றும் பித்தம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவும், தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் நித்யா.

எப்படி பயன்படுத்துவது?

எண்ணெயை லேசாக சூடுபடுத்தி, தலைக்கு நன்றாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து, மூலிகை ஷாம்பூ அல்லது இயற்கையான ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை அலசலாம். கெமிக்கல் ஷாம்பூக்களை தவிர்ப்பது நல்லது. இந்த ஹேர் ஆயிலை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவு முறையையும் பின்பற்ற வேண்டும். அதிக காரமான, உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தலைமுடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள், கரிசாலை லேகியம் அல்லது கரிசாலை கற்பம் போன்ற சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது கூடுதல் பலன் அளிக்கும் என்று மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: