பச்சை மிளகாய் போதும்ங்க..! காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்

பச்சை மிளகாயை வைத்து இந்த இரண்டு வகையான காரசாரமான சட்னியை செய்து பாருங்கள். நிச்சயம் திரும்பத் திரும்ப செய்யத் தூண்டும்.

By: November 16, 2020, 8:44:36 AM

Green Chilli Chutney Home Style Recipes Tamil : தக்காளி, வெங்காயம், தேங்காய் ஆகியவற்றிலேயே சட்னி அரைத்துச் சலித்துவிட்டதா? பச்சை மிளகாயை வைத்து இந்த இரண்டு வகையான காரசாரமான சட்னியை அடுத்த முறை செய்து பாருங்கள். நிச்சயம் மறுபடி மறுபடி விரும்பி செய்வீர்கள்.

ராஜ்கோட் ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி :

முதலில் ராஜ்கோட் ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். இந்த குஜராத்தி பச்சை மிளகாய் சட்னி உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு பக்கா மேட்ச்.

தேவையான பொருள்கள் :

தோராயமாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1/2 கப்
லேசாக வறுத்த வேர்க்கடலை – ½ கப்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
அரை பழத்திலிருந்து எடுக்கப்பட்ட எலுமிச்சை சாறு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

*தேவையான பொருள்கள் அனைத்தையும் மிக்சி-கிரைண்டரில் நன்கு அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால், ஈரப்பதம் குறைந்து சட்னியின் ஆயுளை அதிகரிக்கும். ஆனால், தண்ணீர் சேர்க்க விரும்பினால் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளவும். சட்னியின் பதம் அடர்த்தியாக இருந்தால் சுவை அதிகமாக இருக்கும்.

*இந்த சட்னியைக் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தலாம்.

*இந்த சட்னி மிகவும், மிகவும் காரமாக இருக்கும் என்பதால் நீங்கள் அதைச் சாப்பிட விரும்பும் போதெல்லாம், சிறியளவு தண்ணீர் சேர்த்துச் சுவைக்கலாம்.

Green Chilli Chutney Home Style Recipes Tamil Rajkot Green Chilli Chutney Home Style Recipes

பச்சை மிளகாய் தொக்கு :

தேவையான பொருள்கள் :

தோராயமாக நறுக்கிய பச்சை மிளகாய் – ½ கப்
புளி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
வெந்தய தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் (உங்களிடம் இது இல்லையென்றால், எந்த நடுநிலை எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்) – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
வெல்லம் (விரும்பினால்) – ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

Green Chilli Thokku Home Style Recipes Tamil Green Chilli Thokku Home Style Recipes

செய்முறை :

* பச்சை மிளகாயைத் தேங்காய் எண்ணெய்யில் நன்கு வறுக்கவும். வறுத்த மிளகாயைக் குளிர் வைக்கவும்.

*அதே எண்ணெய்யில் கடுகு சேர்த்து, வெடித்தபின் பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்ததும், தீயை அணைக்கவும்.சேர்க்கவும்.

*மிக்சி-கிரைண்டரில் எண்ணெய்யுடன் வறுத்த மிளகாய், வெந்தயம் தூள், புளி விழுது, வெல்லம் (பயன்படுத்தினால்) மற்றும் உப்பு சேர்த்து அதனோடு மிகக் குறைந்த தண்ணீரையும் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும்.

*குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Green chilli chutney home style recipes tamil food recipe

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X