ஒரு முறை பச்சை பட்டணியில் தோசைசெய்து பாருங்க. செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் பச்சை பட்டாணி
3 பச்சை மிளகாய்
¼ கப் கொத்தமல்லி இலை
1 கொத்து கருவேப்பிலை
1 ஸ்பூன் இஞ்சி நறுக்கியது
உப்பு தேவையான அளவு
2 கப் தோசை மாவு
செய்முறை: ஒரு மிக்ஸியில் பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி நறுக்கியது சேர்த்து அரைத்து கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் தோசை மாவை ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து எண்ணெய் ஊற்றி தோசை சுட்டு எடுக்கவும்.