Advertisment

கொஞ்சம் கிரீன் டீ போதும்: பிரஷ் ஐஸ்கிரீம் ரெடி; ட்ரை பண்ணி பாருங்க

டேஸ்டியான கிரீன் டீ ஐஸ்கிரீம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Ice cream.jpg

பொதுவாக கிரீன் டீ  என்றால் ஒரு வகையான டீ என்று தான் நமக்கு தெரியும். நமக்கு நியாபகம் வருவதும் அதுதான். ஆனால் கிரீன் டீ வைத்து ஐஸ்கிரீம் கூட செய்யலாமாம். இங்கே கிரீன் டீ  ஐஸ்கிரீம் செய்வது குறித்து பார்ப்போம். 

Advertisment

தேவையான அளவு

பிரஷ் கிரீம்- 300 மி.லி

முட்டை - 6 

கஸ்டர்டு சுகர்- 1/2 கப் 

கிரீன் டீ தூள் - 20 கிராம் 

செய்முறை

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதை அடுப்பில் வைத்து அதில் பால், பிரஷ் கிரீமை சேர்த்து மிதமான தீயில்  கலக்க வேண்டும். அது லேசாக சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் கஸ்டர்டு சுகருடன் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்க வேண்டும். பின்னர் அதனுடன் கிரின் டீ தூளை சேர்த்து கலக்கவும். 

இப்போது காய்ச்சி எடுத்து வைத்துள்ள பாலை  கொஞ்சம் கொஞ்சமாக  ஊற்றி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். இந்த கலவையை வடிகட்டிக்கொள்ளுங்கள். அடுத்து அடிகனமான வாய் அகன்ற பாத்திரத்தில் இதை மாற்றி ஊற்றி மிதமான தீயில் கிளறுங்கள். 

கலவை கெட்டியாகத் தொடங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வையுங்கள். பின்பு அதை ஒரு பாத்திரம் அல்லது பவுலில் ஊற்றி பிரிஜ்ஜில் வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து மிக்சி ஜாரில் போட்டு அடித்துக்கொள்ளவும். பின்பு மீண்டும் பிரிஜ்ஜில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்தால் சுவையான  கிரீன் டீ ஐஸ்கிரீம் ரெடி. 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment