இளநரை என்பது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை. கெமிக்கல் கலந்த ஹேர் டைகளைப் பயன்படுத்தினால், இருக்கும் முடியும் கொட்டிவிடும் அபாயம் உள்ளது. ஆனால், நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் இரண்டு பொருட்கள் போதும், இளநரையைப் போக்கி கூந்தலுக்கு கருமை சேர்க்க! ஆம், அவைதான் மஞ்சள் தூள் மற்றும் டீத்தூள்!
தேவையான பொருட்கள்
Advertisment
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் டீத்தூள் (எந்த பிராண்டாக இருந்தாலும் சரி) - 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
தயாரிக்கும் முறை
Advertisment
Advertisements
ஒரு இரும்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடுபடுத்தவும். கல் நன்கு சூடானதும், அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கத் தொடங்கவும். மஞ்சள்தூள் நன்கு சூடானதும், அதே அளவு (ஒரு ஸ்பூன்) டீத்தூளையும் சேர்த்துக் கொள்ளவும்.
மஞ்சள்தூள் மற்றும் டீத்தூள் கலவையை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இந்தக் கலவை நன்கு கருப்பு நிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். இது கருப்பு நிறமாக மாற சுமார் 10 நிமிடங்கள் ஆகும். கலவை அடர் கருப்பு நிறத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து விடவும். கல்லின் சூட்டிலேயே கலவை மேலும் கருமையாகும்.
நன்கு ஆறிய பிறகு, இந்தக் கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, நன்கு நைசான பொடியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த இந்தப் பொடியை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இந்த பொடியை அதிகமாகத் தயாரித்து ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்படி உபயோகிப்பது?
சேமித்து வைத்த பொடியிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதிக எண்ணெய் சேர்த்து மிகவும் நீர்த்துப் போகும்படி கலக்க வேண்டாம், ஏனெனில் அது தலையில் ஒட்டாது. கலவை தலையில் தடவக்கூடிய பசை போல இருக்க வேண்டும்.
இந்தக் கலவையை உங்களுக்கு எங்கு வெள்ளை முடி இருக்கிறதோ, அந்தப் பகுதிகளில் மட்டும் தடவவும். குறிப்பாக முன் தலையில் வெள்ளை முடி இருப்பவர்கள் இதைத் தடவி வர, முடி அடர் கருப்பு நிறமாக மாறும். கெமிக்கல் கலந்த ஹேர் டைகள் பயன்படுத்தத் தேவையில்லை.
இந்த இயற்கைத் தீர்வு உங்கள் இளநரையைப் போக்க ஒரு எளிய மற்றும் பாதுகாப்பான வழியாகும். முயற்சி செய்து பார்த்து பலன் பெறுங்கள்!