இன்றைய காலகட்டத்தில், இளநரை (Premature Graying) என்பது இளம் வயதினரிடையே, ஏன் குழந்தை பருவத்தினரிடமும் கூட அதிகரித்து வரும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இது உடல் உஷ்ணம், மன அழுத்தம், பித்த அதிகரிப்பு மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.
இந்த நரைமுடியை சரிசெய்யவும், ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்கவும் சித்த மருத்துவத்தில் பயனுள்ள தீர்வுகள் உள்ளதாக கூறுகிறார் டாக்டர் நித்யா.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/yjIzRiAKeLBz2ahMPkFH.jpg)
நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்: ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு லேசாக சூடுபடுத்தி, விரல்களால் தொட்டு தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இது இளநரை பிரச்சனையை படிப்படியாக குணப்படுத்தும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்யலாம்.
தான்றிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்: நெல்லிக்காய்க்கு பதிலாக தான்றிக்காய் பொடியையும் தேங்காய் எண்ணெயில் கலந்து பயன்படுத்தலாம். இது கூந்தல் வேர்களை பலப்படுத்துவதுடன், பொடுகு பிரச்சனையை நீக்கி, முடி உதிர்வதையும் குறைக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்வது நல்லது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/10/fresh-coconut-storage-preservation-2025-07-10-16-45-57.jpg)
தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு வெளிப்புற பூச்சுக்களை மட்டும் நம்பாமல், உடலின் உள்ளே இருக்கும் கல்லீரல் மற்றும் ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்வதன் மூலமே இளநரை மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும், என்கிறார் டாக்டர் நித்யா.