கொத்தமல்லியை அரைத்து இதை சேர்த்து தடவுங்க… முகம் பிரைட் ஆக சூப்பர் ஃபேஸ் பேக் இதுதான்!
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கொத்தமல்லி தழையில் இவ்வளவு நன்மைகளா? ஆம்! கண்டிப்பாக உள்ளது. கொத்தமல்லியை வைத்து 2 விதமான ஃபேஸ் பேக் பற்றி மீனூ’ஸ் பியூட்டி டிப்ஸ் தமிழ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கொத்தமல்லி தழையில் இவ்வளவு நன்மைகளா? ஆம்! கண்டிப்பாக உள்ளது. கொத்தமல்லியை வைத்து 2 விதமான ஃபேஸ் பேக் பற்றி மீனூ’ஸ் பியூட்டி டிப்ஸ் தமிழ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொத்தமல்லியை அரைத்து இதை சேர்த்து தடவுங்க… முகம் பிரைட் ஆக சூப்பர் ஃபேஸ் பேக் இதுதான்!
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கொத்தமல்லி தழையில் இவ்வளவு நன்மைகளா? ஆம்! கண்டிப்பாக உள்ளது. உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் இறந்த செல்களை நீக்கி, சருமம் பொலிவு பெற உதவுகிறது. மேலும், எல்லா விதமான சருமத்திற்கும், ஏற்றது. இந்தக் கொத்தமல்லியை வைத்து 2 விதமான ஃபேஸ் பேக் பற்றி மீனூ’ஸ் பியூட்டி டிப்ஸ் தமிழ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Advertisment
டிப்ஸ்: 1
முதலில் ஒரு கைப்பிடி அளவு ஃப்ரெஷ் கொத்தமல்லி தழையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை மிக்சியில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் பால் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்ச்சாத பாலாக இருந்தால் நல்லது. அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து இந்த மூன்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணுங்கள். பிறகு, இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக அப்ளை பண்ணிக்கொள்ளுங்கள். அப்ளை பண்ணிவிட்டு, அது காயும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். 10 நிமிடம் கழித்து, உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் நீங்கிவிடும். பிறகு, உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவிவிடுங்கள். கழுவிய பிறகு, உங்கள் முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். இதை தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்துவந்தால், உங்கள் முகம் பொலிவுடன் அழகாக மாறும்.
டிப்ஸ்: 2
Advertisment
Advertisements
கொத்தமல்லி தழையை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன், ஒரு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல், சேர்த்துக்கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக பேஸ்ட் மாதிரி மிக்ஸ் பண்ணிக்கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில், கழுத்துப் பகுதியில் அப்ளை பண்ணினால், உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மெதுவாக மறைய ஆரம்பிக்கும். இந்த சுருக்கங்கள் குறைந்தால், உங்கள் முகம் இளமையாக தோன்றும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.