சுவையான வேர்க் கடலை பூண்டு பொடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வேர்க் கடலை - 1 கப்
உலர்ந்த சிவப்பு மிளகாய்- 3-4
பூண்டு - 3 அல்லது 4 பல்
புளி - சிறிதளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய்- 1 கப்
பொட்டுக் கடலை- கால் கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங்காயம்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கடலையை தோல் அகற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேர்க்கடலை நன்றாக வறுக்கவும். அதன்பிறகு சீரகம், பூண்டு, புளி, சிவப்பு மிளகாய், பொட்டுக்கடலை, தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
கலவையை கருக்கி விடக் கூடாது. மிதமான தீயில் வைத்து வறுக்கவும். பூண்டின் சுவை மாறாமல் அதே சுவையில் வேண்டுமானால், அவற்றை வறுக்காமல் தட்டியும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது கலவையை ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
ஒரே சுற்றாக அரைக்காமல் சிறிது இடைவெளி விட்டு விட்டு அரைத்து எடுக்கவும். அப்போது தான் பொடி பதத்திற்கு வரும். பொடியாக அரைத்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான் மணமான சுவையான வேர்க் கடலை பூண்டு பொடி ரெடி. இட்லி, தோசை ஏன் சாப்பாட்டிற்கு கூட போட்டு சாப்பிடலாம். நெய் அல்லது நல்லெண்ணை சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“