சுவையான வேர்க் கடலை துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வேர்க் கடலைப் பருப்பு – 1 கப்
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 6
புளி, பெருங்காயம், உப்பு – தேவைக்கு
தாளிக்க தேவையானவை
கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் விட்டு, வரமிளகாய், தேங்காய் துருவலை வதக்கிக் கொண்டு, கடலைப் பருப்பை போட்டு வறுக்கவும். இந்த கலவை ஆறியதும் உப்பு, புளி, பெருங்காயம் சேர்த்து சிறிது நீர் தெளித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது மீண்டும் கடாய் வைத்து தாளிக்க தேவையான பொருட்களை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும். அவ்வளவு தான் வேர்க் கடலை துவையல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“