ஆரஞ்சை விட 4 மடங்கு விட்டமின் சி; மாதுளையை விட 2 மடங்கு புரோட்டீன்... இந்த பழத்தை மிஸ் பண்ணாதீங்க மக்களே!

கொய்யா பழத்தில் ஆச்சரயம் அளிக்கும் அத்தனை நன்மைகள் உள்ளன. மருத்துவர் சிவக்குமார் இதை விவரிக்கிறார்.

கொய்யா பழத்தில் ஆச்சரயம் அளிக்கும் அத்தனை நன்மைகள் உள்ளன. மருத்துவர் சிவக்குமார் இதை விவரிக்கிறார்.

author-image
WebDesk
New Update
guava leaves

மருத்துவர் பி.சிவக்குமார் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கொய்யா பழம் மற்றும் அதன் இலைகளில் உள்ள நன்மைகளை விளக்கி உள்ளார்.  அவர் கூறுகையில், நாம் தினமும் காற்கறிகள் போல் பழமும் சாப்பிட வேண்டும். பழத்தில் நேச்சுரல் சுகர், நார்ச்சத்து, விட்டமின், ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளது. கொய்யா பழம் இந்தியாவில் விளையக் கூடியது. இதில் அத்தனை நன்மைகள் உள்ளன. இது ஒரு அமிர்தம் என்று கூறலாம்.  

Advertisment

காரணம் ஆரஞ்சில் உள்ளதை விட 4 மடங்கு விட்டமின் சி உள்ளது. பப்பாளியில் உள்ள ஃபைபரை விட 3 மடங்கு அதிகம், மாதுளையை விட 2 மடங்கு புரோட்டீன் இதில் உள்ளது. லைக்கோஃபின் ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதில் 2 மடங்கு அதிகம் உள்ளது. இந்த பழத்தை தினமும் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் உள்ளன.

உடல் எடை குறைக்க உதவும். இதில் நீர்ச்சத்து 81 கிராம் உள்ளது. 5.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கலை தீர்க்க உதவும். விட்டமின் சி அதிகமாக உள்ளதால் எதிர்ப்பு சக்தி கூடும். விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் பார்வைக்கு நல்லது. இது ஒட்டுமொத்தமாக இதயம், நரம்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கிறது.  கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். 

மகப்பேறு காலத்தில் பெண்கள் இதை கட்டாயம் சாப்பிடலாம். இதில் ஃபோலேட் 49 மைக்ரோகிராம் உள்ளது. லைக்கோஃபின், கேரட்டின் என்ற 2 ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளதால் மரபணு பாதுகாக்கப்படுகிறது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் கொய்யா பழத்தை சாப்பிடலாம். ஆனால் அதை காயாக இருக்கும் போது சாப்பிடலாம். பழமாக எடுக்கும் போது க்லைசினிக் இன்டக்ஸ் அளவு அதிகரிக்கும். 

Advertisment
Advertisements

அதே நேரம் கொய்யா பழத்தை விட அதன் இலையில் அதிக சத்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆன்டி பேக்டீரியல்,  ஆன்டி இன்ஃபிலமேட்டரி வரை பல நன்மைகள் இலையில் உள்ளது. கொய்யா இலை டீ, கொய்யா இலை மவுத் வாஃஸ் என இதைப் பயன்படுத்தலாம்.  வாய்ப் பிரச்சனைக்கு சிறந்ததாக இருக்கும் என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: