Gulab jamun recipe tamil gulab jamun : குலாப் ஜாமுன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு.
Advertisment
இவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தநாள் பார்ட்டிகளிலும் பரிமாறப்படும் ஒரு சிறப்பு இனிப்பு வகை. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை.
நாவில் வைத்த வினாடியிலேயே கரைந்து போகும் இந்த குலாப் ஜாமுனும் செய்முறையில் சிறிது பிழை ஏற்பட்டாலும் இதனின் சுவை முற்றிலுமாக மாறி விடும். அதனால் குலாப் ஜாமுன் செய்யும் போது மிகக் கவனமாக மாவின் பக்குவம் மாறாமல் பிசைவது மிகவும் அவசியம்.
gulab jamun recipe video :செய்முறை!
Advertisment
Advertisements
முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை, 2 கப் தண்ணீர், குங்குமப்பூ, அரை டீஸ்பூன் ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து பால், ஏலத்தூள், நெய் சேர்த்து கலந்துவிடவும். பால் கொதிவந்ததும், கோதுமை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.
கோதுமை மாவு வேக வேக கெட்டியாகும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் கையில் நெய் தடவி நன்றாக பிசைந்து உருண்டைகள் தயார் செய்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை தட்டி, அதன்மீது வடிவங்களை பொருத்திக் கொள்ளலாம். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு உருண்டைகளாகவிட்டு பொன்னிறமாக பொருத்திக் கொள்ளவும். பிறகு, பொரித்த உருண்டைகளை சர்க்கரை ஜீராவில் போட்டு ஊறவிட்டு எடுத்து பரிமாறவும்.