இட்லி மாவு இருந்தால் போதும். ரொம்ப ஈசியா குலோப் ஜாமுன் செய்யலாம்.
செய்முறை
இட்லி மாவு 2 கப்
ரவை 3 ஸ்பூன்
1 கேரட் அரைத்தது
1 கப் சர்க்கரை
1 கப் தண்ணீர்
கால் ஸ்பூன் ஏலக்காய் தூள்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: இட்லி மாவில், ரவை, அரைத்த கேரட் சேர்த்துகொள்ள வேண்டும். இட்லி மாவு அதிகம் புளிக்க கூடாது. தொடர்ந்து இந்த மாவை 15 நிமிடங்கள் ஊற விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். ஜீரா ரெடி செய்ய வேண்டும். அதில் ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும். தொடர்ந்து அடுப்பை அணைக்கவும். எண்ணெய்யை சூடாக்க வேண்டும். அதில் சிறிய சிறிய உருண்டைகளாக மாவை போட்டு பொறித்தி எடுக்கவும். குறிப்பாக அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொறித்து எடுக்கவும். தொடர்ந்து அதை சீராவில் போடவும். அதிக நேரம் ஜீராவில் இருந்தால், நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“