Advertisment

Guru Peyarchi Palangal 2018: குருப்பெயர்ச்சி எந்த ராசியில் குரு இருக்கிறார் தெரியுமா?

Guru Peyarchi Palangal 2018 Celebrations: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம்,மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் காலமாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Guru Peyarchi Palangal 2018: குருப்பெயர்ச்சி எந்த ராசியில் குரு இருக்கிறார் தெரியுமா?

Guru Peyarchi Palangal 2018:  நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி வரும் 4 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 11ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த ஆண்டு வியாழக்கிழமை குருப்பெயர்ச்சி நிகழ உள்ளது சிறப்பான அம்சமாகும். இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளை செய்வார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம்,மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் காலமாகும். புகழ், பதவி, அந்தஸ்து, திருமணம், புத்திர பாக்கியம் என ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைத் தீர்மானிப்பதில் குரு பகவானுக்கு முக்கியப் பங்குண்டு. 'குரு பார்க்க கோடி நன்மை' என்று கூறுகிறார்கள். குருவின் பார்வை உச்சத்தில் இருக்கும் ஒருவன், வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெறுவான்.

Advertisment

குரு பகவான். அறிவு, வித்யை, ஞானம் ஆகியவற்றுக்கு இவரே காரகத்துவம் வகிக்கிறார். இவரை 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள். தேவர்கள் அனைவருக்கும் குருவாகத் திகழ்வதால், 'தேவகுரு' என்றும் அழைப்பார்கள்

குருபார்க்க கோடி நன்மை' என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரத் தொடங்கும். இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும் என்பதால் அதிகம் அச்சப்படத் தேவையில்லை.

வியாழன் எனும் வானியல் கிரகமே ஜோதிட சாஸ்திரத்தில் குரு. பிரகஸ்பதி, தனகாரகன், புத்திரகாரகன், லோகபூஜ்யர், வாகீசர், பீதாம்பரர், பொன்னன் என்றெல்லாம் குரு பகவானைச் சிறப்பித்துச் சொல்வார்கள்.

குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயருகிறார். இதையொட்டி குருஸ்தலமான வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோயிலில், வருடந்தோறும் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தேறும். நேற்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், பரிகாரங்கள், ஹோமங்கள் ஆகியவை நடைபெற்றன.

Guru Peyarchi Palangal 2018 to 2019: குரு பகவான் விஷேசம்!

ஜோதிடத்தில் குரு பகவான் பிரகஸ்பதி,தனகாரகன்,புத்திரகாரகன், பொன்னவன் என்றெல்லாம் குரு பகவானைச் சிறப்பித்துச் சொல்வார்கள். குரு பார்வையால் கடகம், ரிஷபம், துலாம், மீனம் ராசிக்காரர்கள் நன்மை அடைவார்கள் என்றும் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் பரிகார பூஜைகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் குருபரிகார தலமாக விளங்கும் உத்தமர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பரிகார ஹோமங்கள் நேற்று நடைப்பெற்றன.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment