கர்ப்பம் என்பது பெண்கள் அனுபவிக்கும் ஒரு அழகான பயணம். கற்றல் அனுபவங்கள், உணர்ச்சிகள் மற்றும் சவால்கள் நிறைந்த தாய்மை என்பது நீங்கள் தயாராக இருக்க வேண்டிய ஒன்று. அதிலும் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கும் பெற்றோருக்கு ஆச்சரியமாக மட்டும் இல்லை, அதிக ஆபத்துள்ள கர்ப்பத்தின் வாய்ப்புகளையும் அதிகரிக்கலாம்.
அதிக ஆபத்துள்ள கர்ப்பம் கவலைப்பட வேண்டிய ஒன்று அல்ல. ஆனால் நிச்சயமாக, சில விஷயங்கள் அதிர்ச்சியளிக்கலாம்” என்று குருகிராமில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின், மகப்பேறு மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஷர்மிளா சோலங்கி கூறினார். விஷயங்களை எளிதாக்கும் சில அத்தியாவசிய உதவிக்குறிப்புகளை அவர் பரிந்துரைத்தார்.
நாளுக்கு 3 முறை ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
ஆரோக்கியமான உணவு பல பிரச்சனைகளை தீர்க்கிறது, அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவைகளை கவனித்துக்கொள்கிறது. “கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் இரட்டைக் குழந்தைகளுக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது. கலோரி எண்ணிக்கை அதிகரித்தால் அது இயல்பானது, நீங்கள் இரண்டு குழந்தைகளை சுமக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று டாக்டர் சோலங்கி அறிவுறுத்தினார்.
பதப்படுத்தப்பட்ட அல்லது பாக்கெட் உணவைத் தவிர்க்கவும். புதிய, பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உணவில் அதிக புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் உள்ள உணவுகளையும் சேர்க்கலாம். “ஒரு நாளைக்கு மூன்று முறையாவது சரியான உணவை உண்ணுங்கள். நீரேற்றத்துடன் இருங்கள்” என்று டாக்டர் சோலங்கி கூறினார்.
சுறுசுறுப்பாக இருங்கள்
இரட்டைக் கர்ப்பம் பற்றி அறிந்தவுடன், பெண்கள் கூடுதல் ஓய்வு எடுக்கத் தொடங்குவது வழக்கம். ஆரம்ப மாதங்களில் சுறுசுறுப்பாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். இது தாய் மற்றும் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்". மிதமான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா ஆபத்தை குறைக்கிறது மற்றும் பிரசவத்திற்கு தசைகளை தயார்படுத்துகிறது. மேலும் துல்லியமான விவரங்களுக்கு உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
தூங்கும்போது பக்கவாட்டில் ஆதரவு தேவை
அனைவருக்கும் ஒரு வசதியான தூக்க நிலை உள்ளது, ஆனால் குறிப்பாக கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள், குறிப்பிட்ட ஒரு நிலையில் படுத்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர். இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கும் தாய், கர்ப்பமாகி 16 வாரங்களுக்குப் பிறகு பக்கவாட்டில் தூங்க பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் லேசான வீக்கம், முதுகுவலி அல்லது பிற பொதுவான அறிகுறிகளை அனுபவிக்கலாம். தேவைப்பட்டால், இரத்த ஓட்டத்தை பராமரிக்க சுருக்க காலுறைகளை (compression stockings) அணியுங்கள்" என்று டாக்டர் சோலங்கி அறிவுறுத்தினார்.
முன்கூட்டியே உங்களை தயார்படுத்துங்கள்
விஷயங்களை நன்கு தெரிந்துகொள்ளவும், கர்ப்பம் பற்றிய உங்கள் சந்தேகங்களை நீக்கவும் நல்ல ஆதாரங்களில் இருந்து புத்தகங்களைப் படியுங்கள். கடைசி நிமிட அவசர முடிவுகளைத் தவிர்க்க, மகப்பேறு ஆடைகள், குழந்தைப் பொருட்கள் மற்றும் ஆடைகளை முன்கூட்டியே தயார் செய்யவும். தொழில்முறை பராமரிப்பு அல்லது பயிற்சி பெற்ற செவிலியர்களைத் தேடுங்கள், கடைசி நிமிடத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் நிம்மதியாக இருக்க முன்கூட்டியே சந்திப்புகளை மேற்கொள்ளுங்கள்.
மதுவைத் தவிர்க்கவும்
ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு. மது, புகைத்தல் மற்றும் புகையிலை பொருட்களை உட்கொள்வதை முற்றிலுமாக கைவிடுமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
"இவை எதிர்கால மருத்துவ நிலைமைகளை விளைவிக்கும் அபாயங்களை அதிகரிக்கலாம்" என்று டாக்டர் சோலங்கி கூறினார்.
அறிகுறிகளைப் படியுங்கள்
பல கர்ப்ப நிகழ்வுகளில் குறைப்பிரசவம் மற்றும் முன்கூட்டிய பிறப்பு ஆகியவை பொதுவானவை. உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள், மேலும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு, ஏதேனும் சிக்கலை நீங்கள் உணர்ந்தாலோ அல்லது அவதானித்தாலோ அதை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“