எப்போதுமே இளமையாக தோன்றுவதில் சரும பராமரிப்பு மிக முக்கிய காரணியாகும். சருமம் ஆரோக்கியமாக இருந்தால், பல்வேறு பிரச்சனைகளை தடுக்க முடியும். இதனால் பலரும் ஃபேஸ் க்ரீம், சீரம், டோனர் போன்ற பல அழகு சாதன பொருள்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர்.
ஆனால், ஆரோக்கியமான சருமத்தை அடைவதற்கு உணவு முறை மாற்றமே கைகொடுக்கும். எவ்வளவு தான் வெளிப்புறமாக பயன்படுத்தும் பொருள்களை எடுத்துக் கொண்டாலும், அவை தற்காலிக தீர்வை மட்டுமே வழங்கும். நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு உணவு முறை மூலம் பெறப்படும் சத்துகளே இன்றி அமையாததாகும்.
அதன்படி, சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் மாற்றுவதற்கு உதவும் உணவுகள் குறித்து தற்போது பார்க்கலாம். கொலஜன் நம் உடலில் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாம் இளமையாக காணப்படும். அதனடிப்படையில், இந்த உணவுகளில் கொலஜன் தேவையான அளவு இருக்கிறது.
அசைவ உணவு பிரியராக இருந்தால் மீன், சிக்கன் மற்றும் காடை ஆகிய உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இவற்றை எண்ணெய்யில் பொறித்து சாப்பிடுவதை விட, வேக வைத்து அல்லது குழம்பாக வைத்து சாப்பிடலாம்.
இதேபோல், தினசரி உணவில் கீரை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வைட்டமின் சி இருக்கும் உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும். நெல்லிக்காய், ஆரஞ்சு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சின்க், வைட்டமின் இ அதிகமாக இருக்கும் பூசணி விதைகளை ஸ்நாக்சாக அடிக்கடி சாப்பிடலாம். இது நம் சருமத்தில் இருக்கும் கொலஜனை அதிகப்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“