/indian-express-tamil/media/media_files/2024/12/28/gjH0KD7ZSRDJHGrQtrIi.jpg)
மெக்கா நகரில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
உலக அளவில் வெப்பம் அதிகமாக காணப்படும் இடங்களில் முதன்மையானது அரபு தேசம். பகல் நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாதபடி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனினும், அத்தி பூத்தாற்போல் இங்கு சில சமயங்களில் மழை பெய்யும்.
இந்நிலையில், கால நிலை மாற்றத்தின் படி அரபு தேசத்தில் தற்போது குளிர்காலம் என்பதால், ஆலங்கட்டி மழை பெய்தது. மெக்கா நகரில் பெய்த இந்த மழையால் அங்கு புனிதப் பயணம் வந்திருந்த மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மழை நின்றதும் அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
செய்தி - பி.ரஹ்மான்
மெக்கா நகரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் அப்பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.#mecca#viralvideopic.twitter.com/g3r5ssGtMT
— Indian Express Tamil (@IeTamil) December 28, 2024
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.