சீக்கிரம் நரைத்தல், சேதமடைந்த முடிக்கு 'நெல்லி ஹேர் ஆயில்': வீட்டுல இப்படி பண்ணுங்க

உங்கள் மந்தமான கூந்தலை உயிர்ப்பிக்க நீங்களே வீட்டில் தயார் செய்யக்கூடிய எண்ணெய் ரெசிபி இதோ

உங்கள் மந்தமான கூந்தலை உயிர்ப்பிக்க நீங்களே வீட்டில் தயார் செய்யக்கூடிய எண்ணெய் ரெசிபி இதோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amla hair oil

DIY Amla Hair oil

உங்கள் மந்தமான கூந்தலை உயிர்ப்பிக்க நீங்களே வீட்டில் தயார் செய்யக்கூடிய எண்ணெய் ரெசிபி இதோ

Advertisment

இந்த ஹோம்மேட் ஹேர் ஆயிலை, சேதமடைந்த முடி, சீக்கிரம் நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் பயன்படுத்தலாம். இது முடி வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையை குளிர்விக்கவும், உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் கருமையாகவும் மாற்ற உதவுகிறது.

செய்முறை     

pexels_hairhealth                                                

Advertisment
Advertisements

2 நெல்லிக்கனிகளை ஒவ்வொன்றும் 4 துண்டுகளாக வெட்டி, அவற்றை குறைந்தது 1 மணிநேரம் நிழலில் உலர வைக்கவும்.

நெல்லியின் காய்ந்த துண்டுகளுடன் 2 தேக்கரண்டி செஸாமீ ஆயில் (sesame oil எள் எண்ணெய்) மற்றும் 4 தேக்கரண்டி எக்ஸ்ட்ரா வர்ஜின் தேங்காய் எண்ணெய் (extra virgin coconut oil) சேர்க்கவும்.

எண்ணெய்யில் குமிழி வரும் வரை, அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும். வாணலியிலேயே ஆறவிடவும்.

இந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றவும், அதைப் பயன்படுத்துவதற்கு 1 வாரம் முன்பு, சூரிய ஒளி படாதவாறு குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: