சுத்தமான, ஆரோக்கியமான கூந்தலை நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் நம் வாழ்வில் ஒரு கட்டத்தில் பொடுகுக்கு பயந்திருப்போம். உங்கள் உச்சந்தலையில் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட நீங்கள் விரும்பினால், உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்க வேண்டிய ஒரு மந்திரப் பொருள் உள்ளது, ஆப்பிள் சைடர் வினிகர்.
இதன் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் தொற்று, வறட்சி, அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது.
எப்படி அப்ளை செய்வது?
தலைக்கு ஷாம்பு தேய்த்து குளித்த பிறகு ஆப்பிள் சைடர் வினிகர் கொண்டு கழுவுவது உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும், உங்கள் உச்சந்தலையின் pH அளவைத் தக்கவைத்து, மென்மையான, பளபளப்பான மற்றும் மிருதுவான கூந்தலைப் பெறுவீர்கள்.
ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் ஷாம்பு, ஆமணக்கு எண்ணெய், கிளிசரின் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவற்றை கலக்கவும். ஈரமான முடி மற்றும் உச்சந்தலையில் பேக்கைப் பயன்படுத்துங்கள். 10-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு லேசான ஷாம்பூவுடன் கழுவவும்.
குறிப்பு: உங்களுக்கு பொடுகுத் தொல்லை இருந்தால், சாலிசிலிக் அமிலம், ஜிங் பராத்தியான், செலினியம் சல்பைட் அல்லது கெட்டோகனசோல் கொண்ட ஷாம்புவை’ வாரத்திற்கு மூன்று முறை தலையை கழுவுவதற்கு முன், 5-10 நிமிடங்களுக்கு நன்றாக முடியில் தேய்த்து பின்னர் அலசவும்.
மீண்டும் பொடுகு வராமல் இருக்க, அந்த ஷாம்பூவைக் கொண்டு வாரத்திற்கு 1-2 முறை உங்கள் தலைமுடியை கழுவுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“