/indian-express-tamil/media/media_files/2025/05/11/dBxrhAE0XEn2RkudPUUg.jpg)
Banana hair mask
ஹைட்ரேடிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் பண்புகளுக்கு பெயர் பெற்ற வாழைப்பழம், பளபளப்பான முடிக்கு சிறந்த தேர்வாக அமைகிறது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவற்றில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி போன்ற வைட்டமின்களும், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. இவை உங்கள் முடியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உச்சந்தலையையும் ஊக்குவிக்கின்றன.
பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் முடி வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவக்கூடும்.
உணவில் மட்டுமல்லாமல், மக்கள் பெரும்பாலும் வாழைப்பழத்தை ஹேர் மாஸ்க்காகவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க வீட்டில் நீங்களே செய்யக்கூடிய வாழைப்பழ ஹேர் மாஸ்க் இங்கே:
வாழைப்பழம் மற்றும் அவகேடோ ஹேர் மாஸ்க்:
/indian-express-tamil/media/media_files/2025/05/11/Hy3Lxa2dBbgXd3LBEINK.jpg)
அவகேடோவில் பயோட்டின், வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது முடியை மென்மையாக்கி, பட்டுப்போன்ற மிருதுவான தன்மையை அளிக்கும்.
ஒரு பழுத்த வாழைப்பழத்தையும், அதே அளவு அவகேடோவையும் நன்றாக மசித்து, உச்சந்தலையிலும், பிளவுபட்ட முடிகளிலும் தடவவும். சிறந்த முடிவுகளுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பளபளப்பான கூந்தலுக்கு மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை இதைப் பயன்படுத்தலாம்.
வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:
/indian-express-tamil/media/media_files/2m4CACaoGilGAPPyqUqx.jpg)
தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான கூந்தலுக்கான சிறந்த தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முடியின் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்தும் வாழைப்பழத்துடன் இது சேரும்போது, அற்புதமான பலன்களைத் தரும்.
ஒரு பழுத்த வாழைப்பழத்தை 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும். சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊற விடவும். இது உங்கள் முடியை ஈரப்பதமாக்கி, வறட்சியை குறைக்கும்.
வாழைப்பழம் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் ஒரு சிறந்த மூலப்பொருள் என்றாலும், அதை மிதமாகப் பயன்படுத்துவது நல்லது. அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஹேர் மாஸ்க் போட்ட பிறகு மக்கள் தங்கள் தலைமுடியை சரியாகக் கழுவ அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், வாழைப்பழ ஹேர் மாஸ்க்கின் எச்சங்கள் எரிச்சலை ஏற்படுத்தி, பொடுகை அதிகரிக்கக்கூடும்.
இந்த ஹேர் மாஸ்க்குகளை அதிகமாகப் பயன்படுத்துவது முடியின் நுனைகளை உடையக்கூடியதாக மாற்றி, பிளவுபட்ட முடிகள் மற்றும் முடி சேதத்திற்கு வழிவகுக்கும். ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், பக்க விளைவுகள் மற்றும் முடி சேதத்தைத் தவிர்க்க நிபுணர்கள் அல்லது மருத்துவர்களை அணுகவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us