முடிக்கு எண்ணெய் தடவுவது முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அதே வேளையில், பலவிதமான ஹேர் ஆயில்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஒரு ஹேர் ஆயிலை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் முடி வகை கருத்தில் கொள்ள வேண்டும்.
Advertisment
நாம் அனைவரும் வளரும் போது, நம் குடும்பங்களில் அம்மா அல்லது பாட்டி நம் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது ஒரு இனிமையான நினைவாகும். இருப்பினும் நாம் வளர்ந்த பிறகு, பிஸியான வாழ்க்கையில் எண்ணெய் வைக்க மறந்து, தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க ஷாம்பு மற்றும் கண்டிஷனரை நம்பத் தொடங்கினோம். ஆனால், இந்த இனிமையான நினைவுகளைத் தவிர, முடிக்கு எண்ணெய் தடவுவது உங்கள் தலைமுடிக்கு நிறைய நன்மைகளைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பேசிய காஸ்மெடிக் டெர்மட்டாலஜிஸ்ட் மற்றும் ட்ரைக்காலஜிஸ்ட் டாக்டர் கல்பனா சாரங்கி, முடிக்கு எண்ணெய் தடவுதல் நன்மை பயக்கும், ஏனெனில் இது இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது, இது முடியின் மேற்புறத்தை மென்மையாக்கவும் மற்றும் உதிர்வதைக் குறைக்கவும் உதவுகிறது, என்றார்.
இது உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஏனென்றால், ஹேர் ஃபாலிக்கிள்ஸூக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், முடி வேர்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குவதால், ஆரோக்கியமான, அதிக மீள்தன்மை கொண்ட முடியை உருவாக்க முடியும்.
Advertisment
Advertisements
இதை ஒப்புக்கொண்ட தோல் மருத்துவர் சஞ்சிப் சௌதுரி, ஹேர் ஆயிலை சரியாகப் பயன்படுத்தினால் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது உச்சந்தலையை வளர்க்கவும், ஹேர் ஃபாலிக்கிள்ஸை ஈரப்படுத்தவும், வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது.
சரியான ஹேர் ஆயிலை எப்படி தேர்வு செய்வது?
முடிக்கு எண்ணெய் தடவுவது முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அதே வேளையில், பலவிதமான ஹேர் ஆயில்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஒரு ஹேர் ஆயிலை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் முடி வகை கருத்தில் கொள்ள வேண்டும்.
உலர்ந்த, சேதமடைந்த கூந்தலுக்கு, ஆர்கன் அல்லது தேங்காய் போன்ற எண்ணெய்கள் ஆழமான நீரேற்றத்தை அளிக்கும். ஜோஜோபா அல்லது கிரேப்சீட் போன்ற லேசான எண்ணெய்கள் எண்ணெய் முடிக்கு ஏற்றது, என்று டாக்டர் சவுத்ரி கூறினார்.
பல்வேறு வகையான எண்ணெய்களைப் பரிசோதித்து, உங்கள் தலைமுடி அவற்றிற்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைக் கவனிப்பது உங்களுக்கு சிறந்த எண்ணெயைத் தீர்மானிக்க உதவும் என்று டாக்டர் சௌதுரி மேலும் கூறினார்.
எண்ணெய் தடவுவதில் இருந்து எப்போது விலகி இருக்க வேண்டும்?
தோல் மருத்துவர்கள், குறிப்பிட்ட கூந்தல் நிலைகள் உள்ள நபர்களுக்கு எண்ணெய் தடவுவதை கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ பரிந்துரைக்கலாம்.
அதிகப்படியான எண்ணெய் தேய்த்தல், சீபம் தேங்குவதற்கு வழிவகுக்கலாம், இது எண்ணெய் பசை, பொடுகு அல்லது முகப்பருவுக்கு பங்களிக்கலாம். சில எண்ணெய்கள் ஹேர் ஃபாலிக்கிள்ஸை அடைத்து, முடி உதிர்வதற்கு அல்லது மெலிவதற்கு வழிவகுக்கும், என்று டாக்டர் சௌதுரி கூறினார்.
டாக்டர் சாரங்கி, குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் அதிகப்படியான எண்ணெய் தடவுவது, ஃபோலிகுலிடிஸ், ஹேர் ஃபாலிக்கிள்ஸில் வீக்கம், மற்றும் பொடுகு போன்ற உச்சந்தலையில் பிரச்சினைகளை மோசமாக்கும் என்று முடிவு செய்தார்.
இது நெற்றியிலும் முதுகிலும் முகப்பருவுக்கும் பங்களிக்கும், ஏனெனில் எண்ணெய்கள் சருமத்தின் மேற்பரப்பில் பாக்டீரியா மற்றும் பிற அசுத்தங்களை சிக்க வைக்கலாம், இது பருக்களுக்கு வழிவகுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“