உங்கள் தலைமுடியை கவனித்துக் கொள்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்பு தேவை, குறிப்பாக குளிர்காலத்தில் நம் முடி வறண்டு சேதமடையும் வாய்ப்புகள் அதிகம். மேலும் முடியை கவனிக்க சிறந்த வீட்டு வைத்தியத்தை விட வேறு ஏதுவும் இல்லை.
இவற்றில் மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்று, உங்கள் சமையலறையில் உள்ள சில எளிய பொருட்களைப் பயன்படுத்தி நீங்களே வீட்டில் ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம். ஆனால் அதற்குமுன், உங்கள் கூந்தலில் எந்தெந்த பொருட்கள் அப்ளை செய்வதற்கு மிகவும் பொருத்தமானவை என்பதை அறிவது முக்கியம்.
ஹேர் மாஸ்க் தயாரிப்பதற்கு முன் உங்கள் தலைமுடியின் வகையைக் கண்டறிந்து, உங்கள் முடிக்கு சரியான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும், என்று அழகியல் மருத்துவர் க்ஷிதிஜியா ராவ் கூறினார்.
இரண்டு விதமான கூந்தல் வகைகள் மற்றும் இரண்டிற்கும் மிகவும் பொருத்தமான பொருட்களையும் அவர் விளக்கினார்.

உலர்ந்த மற்றும் சேதமடைந்த கூந்தலுக்கு: வெண்ணெய், வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்ற பொருட்களைப் பயன்படுத்தவும்.
க்ரீஸ் முடிக்கு: முட்டையின் வெள்ளைக்கரு, க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை பயன்படுத்தவும்.
அனைத்தையும் கிண்ணத்தில் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்டாக கலக்கவும், அதனால் அவை முடியை நன்கு பூசும், என்று அவர் பரிந்துரைத்தார்.
பலர் தங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்குகளில் தேன், இலவங்கப்பட்டை மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்க்கிறார்கள். தேன் கூந்தலுக்கு பளபளப்பு சேர்க்கும், மென்மையாக்கும் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது, என்று உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூறினார். இலவங்கப்பட்டை அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுக்காகவும் அவர் பரிந்துரைத்தார்.

கூடுதலாக, ஓட்ஸ் உங்கள் தலைமுடிக்கு ஒரு நன்மை பயக்கும் பொருளாகும். ஓட்ஸ் கூந்தலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது. மிகவும் உயிரற்ற இழைகள் கூட புரதம் நிறைந்த ஓட்மீல் மூலம் உற்சாகமான ஊக்கத்தைப் பெறுகின்றன. ஓட்மீலில் உள்ள பயோட்டின் முடியை பளபளப்பாக்குகிறது,.
மறுபுறம் ஆப்பிள் சைடர் வினிகர், முடியின் மேல் அடுக்கை மென்மையாக்குகிறது. மந்தமான மற்றும் உதிர்ந்த முடி அதிக pH அளவைக் கொண்டிருக்கும், இது ஆப்பிள் சைடர் வினிகரின் அசிட்டிக் அமில உள்ளடக்கத்தால் குறைக்கப்படுகிறது. மேலும், வினிகரின் ஆண்டிமைக்ரோபியல் செயல்பாடு உச்சந்தலையில் பூஞ்சை வளர்ச்சியைக் குறைக்கிறது, என்று அவர் மேலும் கூறினார்.
எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை உள்ளவர்கள் கற்றாழையைத் தேர்வு செய்ய வேண்டும். உலர்ந்த உச்சந்தலை உள்ளவர்கள் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். கற்றாழை அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் உச்சந்தலையை ஆற்றுகிறது. க்ரீஸ் முடி வகை கொண்டவர்கள் கற்றாழையில் உண்மையில் பயனடையலாம், என்று நிபுணர் கூறினார்.
மேலும், ஆலிவ் எண்ணெயில் ஸ்குவாலீன் உள்ளது, இது முடியை ஈரப்பதமாக்க உதவுகிறது. அதிக நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்ட எண்ணெய்கள் உச்சந்தலையில் நன்றாக ஊடுருவுகின்றன. மேலும், வைட்டமின் ஈ முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, என்று அவர் மேலும் கூறினார்.