/indian-express-tamil/media/media_files/2025/06/18/Hai oil Best-834b408a.jpg)
Best Hair oil
நம்மில் பலர் கூந்தல் பராமரிப்பு என்றாலே, "மேம், முடிக்கு எந்த எண்ணெய் யூஸ் பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்?" என்றுதான் கேட்கிறோம். அதற்கான பதிலை டாக்டர் ராதா இங்கு தெளிவாக விளக்குகிறார்.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், தேங்காய் எண்ணெயைத் தவிர வேறு எந்த எண்ணெயும் சிறந்ததல்ல என்கிறார் டாக்டர் ராதா. மொராக்கன் ஆயில், ஆர்கன் ஆயில் போன்ற பிற எண்ணெய்கள், கூந்தலுக்கு ஒரு லீவ்-ஆன் கண்டிஷனராகப் பயன்படுத்த ஏற்றவை. ஆனால், தலை குளிப்பதற்கு முன் பயன்படுத்த வேண்டுமென்றால், தேங்காய் எண்ணெயே சிறந்தது.
தலைக்குக் குளிப்பதற்கு முன், தேங்காய் எண்ணெயை அப்ளை செய்து, அதிகபட்சம் அரை மணி நேரம் தலையில் ஊற விடவும். அதன் பிறகு, சாதாரண ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.
முக்கிய குறிப்பு: டாக்டர் ராதா எப்போதும் கூறுவது போல, தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு மட்டுமே! ஸ்கால்ப்பிற்கு (மண்டை ஓட்டிற்கு) தேங்காய் எண்ணெய் அப்ளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இது பொருந்தும். உங்கள் ஸ்கால்ப் மிகவும் வறண்டதாக இருந்தால் மட்டுமே அப்ளை செய்யலாம். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.