Advertisment

21 நாட்களுக்குத் தொடர்ந்து உங்க தலைமுடியைக் கழுவினா பொடுகுத் தொல்லை நீங்குமா?

பொடுகு ஒரு பூஞ்சை. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் தலைக்கு குளிக்காத நாட்களில் அது வளரும்.

author-image
WebDesk
New Update
dandruff

Dandruff Treatment at home

பொடுகு என்பது வியர்வை, கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்துதல், அழுக்கு மற்றும் தூசியின் வெளிப்பாடு போன்ற பல காரணிகளால் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். ஆனால் புறக்கணிக்கப்படும் போது, அது ஒரு நாள்பட்ட பிரச்சினையாக மாறும் என்பது பலருக்குத் தெரியாது. 
இதை விளக்கிய டாக்டர் ரஷ்மி ஷெட்டி, “பொடுகு ஒரு பூஞ்சை. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் தலைக்கு குளிக்காத நாட்களில் அது வளரும். எனவே, பொடுகு மேலும் வளராமல் பார்த்துக் கொள்ள ஒருவர் 21 நாட்களுக்கு தொடர்ந்து தினமும் தலையை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை ஆன்டி டேன்ட்ரஃப் ஷாம்பூவைப் பயன்படுத்தினால், இந்தப் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க முடியாது,” என்றார். 
இது எல்லாருக்கும் வேலை செய்யுமா?
பொடுகு, அல்லது seborrheic dermatitis என்பது, ஈஸ்ட் மலாசீசியாவின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படும் ஒரு பொதுவான உச்சந்தலை நிலையாகும், இது செதில்கள் மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கிறது. 
வழக்கமாக தலைக்கு குளிப்பது, செதில்களை அகற்றி, எண்ணெய் தேங்குவதைக் குறைப்பதன் மூலம் பொடுகை நிர்வகிக்க உதவும் வேளையில், 21 நாட்களுக்கு தினமும் ஷாம்பு போடுவது என்பது உலகளவில் பலனளிக்காது. ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம், மேலும் ஒருவருக்கு வேலை செய்வது மற்றொருவருக்கு வேலை செய்யாது, என்று டாக்டர் சச்சின் குப்தா (consultant, dermatology, Amrita Hospital, Faridabad) கூறினார்.
பொடுகுத் தொல்லையை நீக்க 21 நாட்களுக்குத் தொடர்ந்து உங்கள் தலைமுடியைக் கழுவுவது அல்லது ஷாம்பு போடுவது தற்காலிகத் தீர்வாகும்; உங்கள் பொடுகு காலப்போக்கில் மோசமடையக்கூடும் என்று டாக்டர் ரிங்கி கபூர் கூறினார். (consultant dermatologist, cosmetic dermatologist and dermato-surgeon, The Esthetic Clinics)

Advertisment

hair wash
உங்கள் தலைமுடியை அதிகமாகக் கழுவுவது உங்கள் உச்சந்தலையில் இருந்து அத்தியாவசிய எண்ணெய்களை அகற்றி, வறட்சி மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும். 21 நாட்களுக்கு கெமிக்கல் ஆன்டி டேன்ட்ரஃப் ஷாம்பூவைக் கொண்டு முடியை அதிகமாகக் கழுவுவது, உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும், பின்னர் உடையக்கூடியதாகவும், வறண்டும் இருக்கும், என்றார் டாக்டர் கபூர்.
பொடுகை எப்படி சமாளிப்பது?    
பொடுகு சிகிச்சை, தனிநபரின் தேவைகள் மற்றும் நிலையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப செய்யப்படுகிறது. லேசான பாதிப்புகளுக்கு, கெட்டோகனசோல், செலினியம் சல்பைட் அல்லது ஜிங்க் பைரிதியோன் போன்ற ஆன்டி டேன்ட்ரஃப் ஷாம்புகளை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். கடுமையான பொடுகுக்கு, தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது, என்று டாக்டர் குப்தா கூறினார். 
தோல் மருத்துவர்கள் ஒரு விரிவான மதிப்பீட்டை வழங்கலாம், தீவிரத்தன்மையைப் பொறுத்து லோஷன்கள் அல்லது ஓரல் மெடிசின் போன்ற வலுவான சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம். 
ஒவ்வொருவரின் உச்சந்தலை மற்றும் தோலின் தனிப்பட்ட குணாதிசயங்களைக் கருத்தில் கொண்டு, தனிப்பட்ட கவனிப்பு பொடுகுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான மேலாண்மையை உறுதி செய்கிறது. 
சீரான உணவு மற்றும் முறையான முடி பராமரிப்பு நடைமுறைகள், ஆரோக்கியமான உச்சந்தலைக்கு பங்களிக்கும் மற்றும் பொதுவான உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க உதவும், என்று டாக்டர் குப்தா கூறினார்.
Read in English: Can washing your hair regularly for 21 days keep dandruff away?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment