பக்கவிளைவுகள் இல்லாத முடி உதிர்வுக்கான பயனுள்ள தீர்வுகளை நாம் எப்போதும் தேடுகிறோம். இங்கு பியூட்டி பிளாகர் ஷாலினி இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட ஹேர் பால் சீரம் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
தேவையான பொருட்கள்
1 டீஸ்பூன் - வெந்தயம், ஊறவைத்தது
1 டீஸ்பூன் - அரிசி, ஊறவைத்தது
1 துளிர் - கறிவேப்பிலை
வெங்காயத் தோல்- சிறிதளவு
செய்முறை
*வெந்தயம் மற்றும் அரிசியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
*மறுநாள் காலையில் இதில் வெங்காயத்தோல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்.
*கலவையை ஆறவைத்து வடிகட்டவும். இதை ஒரு ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றவும்.
எப்படி பயன்படுத்துவது?
*இதை ஒரு வாரம் சேமித்து வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தவும் அல்லது இரவு முழுவதும் அல்லது ஹேர் வாஷ் செய்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் வைக்கவும்.
* லேசான ஷாம்பு கொண்டு முடியை கழுவவும்.
குறிப்பு: வீட்டு வைத்தியங்கள் எப்போதும் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றினாலும், ஒவ்வொருவரின் உச்சந்தலையும் இதற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது வேறுபட்டதாக இருக்கலாம். அதனால்தான், வழிகாட்டுதலைத் தேடுவது மிக முக்கியமானது.
முழு விளைவுகளையும் பெற இந்த இயற்கையான ஹேர்ஃபால் சீரம் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். ஆனால் பிரச்சனை தொடர்ந்தால், ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“