தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் முடி உதிர்வை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். இந்த முடி நோய்களை எவ்வாறு சமாளிப்பது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் முடி பராமரிப்பு பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு தீர்வு ஹேர் மாஸ்க் ஆகும்.
தோல் மருத்துவர் ஆஞ்சல் பந்தின் கூற்றுப்படி, முடி இழைகளில் ஒரு கோட்டிங் அமைப்பதன் மூலம், ஹேர் மாஸ்க் பளபளப்பை மீட்டெடுக்கிறது மற்றும் க்யூட்டிகல்களின் பிளவைக் குறைக்கிறது.
ஹேர் மாஸ்க் முடி இழையின் க்யூட்டிகிளில் ஒரு கோட்டிங்கை உருவாக்குகின்றன, இதனால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் தோன்றும், அத்துடன் ஃபிரிக்ஷ்ன் மற்றும் ஃபிரீஸ் ஆகியவற்றைக் குறைக்கிறது, என்று அவர் கூறினார்.
வாழைப்பழம், தேங்காய் எண்ணெய் ஹேர்மாஸ்க்
எந்தவொரு ஹேர் மாஸ்க்கிலும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த யோசனையாகும், ஏனெனில் இது குறைந்த மூலக்கூறு எடையைக் (low molecular weight) கொண்டுள்ளது மற்றும் முடி இழைகளில் நன்றாக ஊடுருவி ஷாம்பு செய்யும் போது முடிக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.
வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசிக்கவும். ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, உங்கள் தலைமுடியில் சமமாக தடவவும். லேசான ஷாம்பூவைக் கொண்டு கழுவவும்.
உங்களில் பொடுகு பிரச்சினைகள் உள்ளவர்கள், ஹேர்மாஸகில் சர்க்கரையைச் சேர்க்கலாம், ஏனெனில் பார்டிக்கிள்ஸ், உங்கள் உச்சந்தலையை எக்ஸ்ஃபாலியேட் செய்யலாம் மற்றும் செதில்களை நீக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“