scorecardresearch

வெந்தயம் இரவு முழுவதும் ஊற வைத்து… ஆரோக்கியமான முடிக்கு தோல் மருத்துவர் சொல்லும் ஹேர் மாஸ்க்

நான் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இதைச் செய்ய விரும்புகிறேன், என்று நிதி இன்ஸ்டாகிராமில் கூறினார்.

lifestyle
Hair care tips

தோல் மருத்துவர் நிதி சிங் டாண்டன் உங்கள் தலைமுடியை பளபளப்பாக்கும், அதன் கண்டிஷனிங் பண்புகளுடன் இன்னும் ஆரோக்கியமாக மாற்றும் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

நான் குழந்தையாக இருந்தபோது என் அம்மா என் தலைமுடியில், எல்லா அழகுக் குறிப்புகளையும் முயற்சிப்பார். என்னை நம்புங்கள், எனக்கு மிகவும் பளபளப்பான முடி இருந்தது. இவற்றுக்குப் பின்னால் எந்த அறிவியல் அல்லது மருத்துவ ஆராய்ச்சி இல்லை என்றாலும், நிச்சயமாக ஒரு பாரம்பரிய முக்கியத்துவம் உள்ளது. இதை நான் முயற்சி செய்து சோதித்தேன்,

மேலும் நான் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இதைச் செய்ய விரும்புகிறேன், என்று நிதி இன்ஸ்டாகிராமில் கூறினார்.

மாஸ்க் எப்படி தயார் செய்வது?

தேவையான பொருட்கள்

2-3 டீஸ்பூன் – வெந்தயம், இரவு முழுவதும் ஊறவைத்தது

2-3 தேக்கரண்டி – தேங்காய் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் பாதி  தயிர்

செய்முறை

ஊறவைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு மாவாக அரைக்கவும். தேங்காய் எண்ணெய், தயிர் சேர்த்து கலக்கவும்.

எப்படி அப்ளை செய்வது?

உங்கள் உச்சந்தலையிலும் முடியின் நீளத்திலும் தடவவும். 20- 30 நிமிடங்கள் வைத்திருந்து, உங்கள் வழக்கமான ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் கழுவவும். வலுவான முடிக்கு இந்த ஹேர் மாஸ்க் கண்டிப்பா டிரை பண்ணுங்க!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Hair care diy hair mask fenugreek curd coconut oil